
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று சற்றே குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.14,810 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,18,480 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.16,167 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.1,29,728 ஆகவும் விற்பனை ஆனது.
தங்கம் விலையில் இன்று ரூ.240 குறைந்தது. எனினும், தற்போது சவரன் விலை ரூ.1.18 லட்சத்துக்கு மேலாகவே நீடிக்கிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (22.5.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.14,780 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.1,18,240 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 குறைந்து ரூ.16,124 ஆகவும், சவரன் விலை ரூ.344 குறைந்து ரூ.1,28,992 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (22.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.295 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.10 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,780 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,240 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,124 (ரூ.43 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,992 (ரூ.344 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,780 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,240 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,124 (ரூ.43 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,28,992 (ரூ.344 குறைவு)
Edited by Induja Raghunathan