Gold Rate Chennai: தங்கம் விலை இரு தினங்களில் ரூ.1,000+ சரிவு!

10:42 AM May 27, 2026 | Jai s

தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று வெகுவாக குறைந்தது நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,730 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,17,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.16,069 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,28,552 ஆகவும் விற்பனை ஆனது.

தங்கம் விலை இரு தினங்களில் மட்டும் ரூ.1,040 குறைந்தது. தற்போது சவரன் விலை ரூ.1.17+ லட்சம் ஆக உள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (27.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 குறைந்து ரூ.14,650 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 குறைந்து ரூ.1,17,200 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 குறைந்து ரூ.15,982 ஆகவும், சவரன் விலை ரூ.696 குறைந்து ரூ.1,27,856 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (27.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.73 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,650 (ரூ.80 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,200 (ரூ.640 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,982 (ரூ.87 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,856 (ரூ.686 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,650 (ரூ.80 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,17,200 (ரூ.640 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,982 (ரூ.87 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,27,856 (ரூ.686 குறைவு)


Edited by Induja Raghunathan