ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்றே இறங்கிய நிலையில், அதே வேகத்தில் இன்று உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,05,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 குறைந்து ரூ.14,433 ஆகவும், சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.1,15,564 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.400 அதிகரித்து, சவரன் விலை ரூ.1.06 லட்சத்துக்கு மேலாகவே நீடிக்கிறது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (17.1.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,280 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,06,240 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 உயர்ந்து ரூ.14,487 ஆகவும், சவரன் விலை ரூ.432 உயர்ந்து ரூ.1,15,896 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (17.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.310 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 உயர்ந்து ரூ.3,10,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.74 ஆக உள்ளது. தற்போது ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் உயர்ந்துள்ளதால் மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,280 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,260 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,487 (ரூ.54 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,896 (ரூ.432 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,280 (ரூ.50 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,06,260 (ரூ.400 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,487 (ரூ.54 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,15,896 (ரூ.432 உயர்வு)
Edited by Induja Raghunathan