
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையும் சரவனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை காலையில் தங்கம் விலையில் இறக்கமும், மாலையில் ஏற்றமும் நிலவியது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,990 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,11,920 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,262 ஆகவும், சவரன் விலை ரூ.1,22,096 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைந்துள்ளது. சவரன் விலை ரூ.1,10,880 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் இன்று சற்றே குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (7.4.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 குறைந்து ரூ.13,860 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 குறைந்து ரூ.15,120 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 குறைந்து ரூ.1,20,960 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (7.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.09 ஆக உள்ளது
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போரும், வளைகுடாவில் பதற்றமும் நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளில் பணவீக்க அச்சம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக கூடி வருகிறது. தற்போது, தங்கம் மீதான முதலீடு சற்றே குறைந்துள்ளதால், ஆபரணத் தங்கம் விலையும் குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,860 (ரூ.130 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,880 (ரூ.1,040 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,120 (ரூ.142 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,960 (ரூ.1,136 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,860 (ரூ.130 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,880 (ரூ.1,040 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,120 (ரூ.142 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,960 (ரூ.1,136 குறைவு)
Edited by Induja Raghunathan