+

Gold Rate Chennai: 2-வது நாளாக அதிரடியாக ரூ.1,200 குறைந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.1,040 குறைந்த நிலையில், இன்று ரூ.1,200 வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1,11,600 ஆக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.

ஆபரணத் தங்கம் விலை இன்று இரண்டாவது நாளாக அதிரடியாக சரிந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 குறைந்து ரூ.15,382 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 குறைந்து ரூ.1,23,056 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.1,040 குறைந்த நிலையில், இன்று ரூ.1,200 வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1,11,600 ஆக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (29.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.150 குறைந்து ரூ.13,950 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.163 குறைந்து ரூ.15,219 ஆகவும், சவரன் விலை ரூ.1,304 குறைந்து ரூ.1,21,752 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (29.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,65,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.78 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் நீடித்துள்ளது. எனினும், இரு தரப்பிலும் இன்னும் அமைதி உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது தங்கம் மீதான முதலீடு மீண்டும் குறையத் தொடங்கியதால், ஆபரணத் தங்கம் விலையும் குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,950 (ரூ.150 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,600 (ரூ.1,200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,219 (ரூ.163 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,752 (ரூ.1,304 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,950 (ரூ.150 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,600 (ரூ.1,200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,219 (ரூ.163 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,752 (ரூ.1,304 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter