+

Gold Rate Chennai: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ் - தங்கம் விலை அதிரடியாக ரூ.3,200 சரிவு; வெள்ளியும் வீழ்ச்சி!

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.3,200 குறைந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.11 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.3,200 குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 உயர்ந்து ரூ.14,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 உயர்ந்து ரூ.15,491 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 உயர்ந்து ரூ.1,23,928 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.3,200 குறைந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.11 லட்சத்துக்கு கீழாக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (10.6.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.400 குறைந்து ரூ.13,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.436 குறைந்து ரூ.15,055 ஆகவும், சவரன் விலை ரூ.3,488 குறைந்து ரூ.1,20,440 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (10.6.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 குறைந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.46 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,800 (ரூ.400 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,400 (ரூ.3,200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,055 (ரூ.436 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,440 (ரூ.3,488 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,800 (ரூ.400 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,10,400 (ரூ.3,200 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,055 (ரூ.436 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,20,440 (ரூ.3,488 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter