ஆபரணத் தங்கம் விலை இன்று வெகுவாக ஏற்றம் கண்டுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.180 குறைந்து ரூ.13,820 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.196 குறைந்து ரூ.15,077 ஆகவும், சவரன் விலை ரூ.1,568 குறைந்து ரூ.1,20,616 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.1,440 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,840 அதிகரித்தது. சவரன் விலை ரூ.1,12,400 ஆக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (6.5.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.230 உயர்ந்து ரூ.14,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,840 உயர்ந்து ரூ.1,12,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.252 உயர்ந்து ரூ.15,328 ஆகவும், சவரன் விலை ரூ.2,008 உயர்ந்து ரூ.1,22,624 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (6.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.01 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதுவும் ஆபரணத் தங்கம் விலையில் எதிரொலித்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,050 (ரூ.230 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,400 (ரூ.1,840 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,328 (ரூ.252 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,624 (ரூ.2,008 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,050 (ரூ.230 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,400 (ரூ.1,840 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,328 (ரூ.252 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,624 (ரூ.2,008 உயர்வு)
Edited by Induja Raghunathan