Gold Rate Chennai: தங்கம் விலை அதிரடியாக ரூ.1,840 உயர்வு - வெள்ளியும் விறுவிறு!

11:23 AM May 12, 2026 | Jai s

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து ரூ.15,382 ஆகவும், சவரன் விலை ரூ.440 குறைந்து ரூ.1,23,056 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,840 அதிகரித்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1.14 லட்சத்தை தாண்டியுள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.15,000 அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (12.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.230 உயர்ந்து ரூ.14,330 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,840 உயர்ந்து ரூ.1,14,640 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.251 உயர்ந்து ரூ.15,633 ஆகவும், சவரன் விலை ரூ.2,008 உயர்ந்து ரூ.1,25,064 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (12.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.300 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.49 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், தங்கம் மீதான முதலீடும் ஏற்றமும் இறக்குமாக உள்ளது. இந்த உறுதியற்ற தன்மையும் ஆபரணத் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,330 (ரூ.230 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,640 (ரூ.1,840 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,633 (ரூ.251 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,25,064 (ரூ.2,008 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,330 (ரூ.230 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,14,640 (ரூ.1,840 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,633 (ரூ.251 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,25,064 (ரூ.2,008 உயர்வு)


Edited by Induja Raghunathan