
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கவலையைத் தந்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.14,200 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.800 உயர்ந்து ரூ.1,13,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 உயர்ந்து ரூ.15,491 ஆகவும், சவரன் விலை ரூ.872 உயர்ந்து ரூ.1,23,928 ஆகவும் விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.1,000 அளவில் உயர்ந்துள்ளது. தற்போது சவரன் விலை ரூ.1,13,840 ஆக உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (27.4.2026):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.14,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.15,524 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,24,192 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (27.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,70,000 ஆகவும் விற்பனை மாற்றமின்றி ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.22 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் நீடித்துள்ளது. எனினும், இரு தரப்பிலும் இன்னும் அமைதி உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், ஆபரணத் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,200 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,600 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,491 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,928 (ரூ.872 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,200 (ரூ.100 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,13,600 (ரூ.800 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,491 (ரூ.109 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,928 (ரூ.872 உயர்வு)
Edited by Induja Raghunathan