+

Gold Rate Chennai: ஒரே நாளில் ரூ.9,520 உயர்ந்து ‘ஷாக்’ - தங்கம் விலை இன்று ரூ.1.34 லட்சம்!

கடந்த இரு வர்த்தக தினங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.14,720 அதிகரித்துள்ளது. கிலோ வெள்ளி விலையும் ரூ.4.25 லட்சத்தை எட்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.9,520 உயர்ந்து சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சி தந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.

சென்னையில் புதன்கிழமை இருமுறை தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15,610 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,24,880 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17,029 ஆகவும், சவரன் விலை ரூ.1,36,232 ஆகவும் விற்பனை ஆனது.

கடந்த இரு வர்த்தக தினங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.14,720 அதிகரித்துள்ளது. கிலோ வெள்ளி விலையும் ரூ.4.25 லட்சத்தை எட்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (29.1.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.1,299 உயர்ந்து ரூ.18,328 ஆகவும், சவரன் விலை ரூ.10,392 உயர்ந்து ரூ.1,46,624 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (29.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.25 உயர்ந்து ரூ.425 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.25,000 உயர்ந்து ரூ.4,25,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.97 ஆக உள்ளது. சர்வதேச அரசியல் சூழல் பதற்ற நிலை காரணமாக தங்கம், வெள்ளி மீதான முதலீடு அதிகரித்து வருவதால் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் கண்டுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,800 (ரூ.1,190 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,34,400 (ரூ.9,520 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.18,328 (ரூ.1,299 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,46,624 (ரூ.10,392 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,800 (ரூ.1,190 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,34,400 (ரூ.9,520 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.18,328 (ரூ.1,299 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,46,624 (ரூ.10,392 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter