+

Gold Rate Chennai: சற்றே தணிந்தது தங்கம் விலை - சவரனுக்கு ரூ.280 குறைவு!

ஆபரணத் தங்கத்தின் சற்றே தணியத் தொடங்கியிருந்தாலும் கூட, சவரன் விலை ரூ.80,000-க்கு நெருக்கமாகவே நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு இன்னும் உயர்வில் இருப்பதே இதற்கு காரணம்.

ஜெட் வேகத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே தணிந்துள்ளது. தற்போது கிராம் விலை ரூ.10,000-க்கு கீழாகவும், சவரன் விலை 80,000-க்கு கீழாகவும் குறைந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.10,005 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.153 உயர்ந்து ரூ.10,915 ஆகவும், சவரன் விலை ரூ.1,224 உயர்ந்து ரூ.87,320 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கத்தின் சற்றே தணியத் தொடங்கியிருந்தாலும் கூட, சவரன் விலை ரூ.80,000-க்கு நெருக்கமாகவே நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு இன்னும் உயர்வில் இருப்பதே இதற்குக் காரணம். எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (8.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.35 குறைந்து ரூ.9,970 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.280 குறைந்து ரூ.79,760 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 குறைந்து ரூ.10,877 ஆகவும், சவரன் விலை ரூ.304 குறைந்து ரூ.87,016 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (8.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.137 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,37,000 ஆகவும் விற்பனை ஆகிறது.


தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.12 என்ற அளவில் இருக்கிறது. எனினும், பங்குச் சந்தை வர்த்தகம் சற்று மீளத் தொடங்கியுள்ளதால், தங்கம் மீதான முதலீடு சற்று குறைந்துள்ளது. இது, ஆபரணத் தங்கம் விலை குறைவுக்கு காரணம். அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,970 (ரூ.35 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.79,769 (ரூ.280 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,877 (ரூ.38 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.87,016 (ரூ.304 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,970 (ரூ.35 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.79,769 (ரூ.280 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,877 (ரூ.38 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.87,016 (ரூ.304 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter