+

ரூ.15,616 கோடி மதிப்பிலான முதலீடு; 17,613 வேலை வாய்ப்புகள் - ஜெர்மனி பயணம் குறித்து ஸ்டாலின் பேட்டி!

தனது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து முதலீட்டுத் திரட்டல் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.9.25) அன்று சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்தார் ஸ்டாலின். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ‘தமிழ்நாட

தனது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து முதலீட்டுத் திரட்டல் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.9.25) சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஸ்டாலின்.

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ‘தமிழ்நாடு வளர்கிறது‘ (TN Rising) என்ற பயணத்தின் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு கடந்த மாதம் 30-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அதன்பின், இங்கிலாந்திற்கு சென்ற அவர், அங்கும் முதலீடுகளைத் திரட்டிய பின் சென்னை திரும்பினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது,

“மன திருப்தியோடு திரும்பி இருக்கிறேன். வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு 15,516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன,” என்றார்.

இந்த வெற்றியின் முக்கியக் காரணியாக இருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஸ்டாலின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். இந்த பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அவர் எடுத்த முயற்சியை முதல்வர் புகழ்ந்தார்.

“தொழில்துறை அமைச்சராக அவர் தன்னை திறமையானவராக நிரூபித்திருக்கிறார்,” என்று புகழாரம் சூட்டினார்.

இந்த பயணம் கடந்த நான்கரை ஆண்டுகளில் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களின் உச்சகட்டமாகும். முதலீட்டுத் தொகை அடிப்படையில் இதுவே என்னுடைய இதுவரை கொண்டிருந்த வெளிநாட்டு பயணங்களில் மிகப்பெரிய வெற்றி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் படத்தை வெளியிட்ட பெருமை, இந்த பயணத்தின் நினைவாக நிலைத்திருக்கும், என்றார் மேலும்.

SOAS பல்கலைக்கழக மாணவர்களுடன், ‘திராவிட மாடல்’ குறித்து கலந்துரையாடல் நடந்ததும் தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் நினைவிடம், சட்டமேதை அம்பேத்கர் வசித்த வீடு, திருவள்ளுவரின் சிலை, தமிழறிஞர் ஜி.யு. போப் நினைவிடம் ஆகிய முக்கியமான இடங்களையும் தான் கண்டு மகிழ்ந்ததைப் பகிர்ந்தார் ஸ்டாலின்.

இந்தப் பயணத்தின் முக்கிய அம்சங்களாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதாவன:

10 புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்துறையை ஆரம்பிக்க முன்வந்துள்ளன. 6 உயர் கல்வி மற்றும் சிறு தொழில்துறை நிறுவனங்கள், தமிழக அரசுடன் கூட்டுப் பணிக்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 17 நிறுவனங்கள், பிற மாநிலங்களுக்கு மாறாமல் தமிழகத்திலேயே தங்கள் விரிவாக்கத்துக்கு தீர்மானித்துள்ளன.

வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்தது பற்றிய செய்தியாளர் கேள்விக்குப் பதில் அளித்த ஸ்டாலின்,

“அவர்கள் பேரார்வம் காட்டினார்கள். நான் ஏற்கெனவே சொன்னது போல் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அவர்களுக்குள்ளேயே கடும் போட்டி இருந்து வருகிறது. இந்த உற்சாகத்தை நாங்கள் நேரடியாகக் கண்டோம்,” என்றார்.
facebook twitter