Gold Rate Chennai: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை நிலவரம் என்ன?

11:42 AM May 02, 2026 | Jai s

ஆபரணத் தங்கம் விலை இறங்கிய வேகத்தில் சற்றே அதிகரித்து இருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தந்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,920 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,11,360 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,186 ஆகவும், சவரன் விலை ரூ.1,21,488 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.1,440 குறைந்த நிலையில், இன்று ரூ.640 அதிகரித்துள்ளது. சவரன் விலை ரூ.1,12,000 ஆக உள்ளது. வெள்ளி விலையும் கூடியுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (1.5.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.14,000 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.15,273 ஆகவும், சவரன் விலை ரூ.696 உயர்ந்து ரூ.1,22,184 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (1.5.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.91 ஆக உள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் நீடித்துள்ளது. எனினும், இரு தரப்பிலும் இன்னும் அமைதி உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது தங்கம் மீதான முதலீடும் சற்றே உயர்ந்துள்ளதால், ஆபரணத் தங்கம் விலையும் கூடியுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,000 (ரூ.80 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,000 (ரூ.640 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,273 (ரூ.87 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,184 (ரூ.696 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,000 (ரூ.80 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,000 (ரூ.640 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,273 (ரூ.87 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,22,184 (ரூ.696 உயர்வு)


Edited by Induja Raghunathan