+

Gold Rate Chennai: ரூ.1.13 லட்சத்துக்கு கீழாக குறைந்தது தங்கம் விலை!

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருக்கிறது.

ஆபரணத் தங்கம் விலை மூன்றாவது நாளாக இன்றும் வெகுவாக குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 குறைந்து ரூ.14,160 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.720 குறைந்து ரூ.1,13,280 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.98 குறைந்து ரூ.15,448 ஆகவும், சவரன் விலை 784 குறைந்து ரூ.1,23,584 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.1,600 குறைந்துள்ளது. சவரன் விலை தற்போது ரூ.1,12,800 ஆக உள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (24.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 குறைந்து ரூ.15,384 ஆகவும், சவரன் விலை 528 குறைந்து ரூ.1,23,056 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (24.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.32 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் நீடித்துள்ளது. எனினும், இரு தரப்பிலும் இன்னும் அமைதி உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது தங்கம் மீதான முதலீடு சற்றே குறைந்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,100 (ரூ.60 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.480 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,384 (ரூ.66 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.528 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,100 (ரூ.60 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.480 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,384 (ரூ.66 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.528 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter