+

Gold Rate Chennai: 2 நாளில் ரூ.2,500+ உயர்வு; ரூ.1.08 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.2,500-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தந்துள்ளது. சவரன் விலை ரூ.1.08 லட்சத்தை கடந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.170 உயர்ந்து ரூ.13,450 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.186 உயர்ந்து ரூ.14,673 ஆகவும், சவரன் விலை ரூ.1,488 உயர்ந்து ரூ.1,17,384 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.2,500-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (20.1.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.13,610 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.175 உயர்ந்து ரூ.14,848 ஆகவும், சவரன் விலை ரூ.1,400 உயர்ந்து ரூ.1,18,784 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (20.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ரூ.330 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.12,000 உயர்ந்து ரூ.3,30,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.99 ஆக உள்ளது.

தற்போது ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. அத்துடன், சர்வதேச அரசியல் போக்குகள் எதிரொலியாக, தங்கம் மீதான முதலீடும் உயர்ந்து வருவதால், ஆபரணத் தங்கம் விலையும், வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,610 (ரூ.160 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,880 (ரூ.1,280 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,848 (ரூ.175 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,784 (ரூ.1,400 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,610 (ரூ.160 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,08,880 (ரூ.1,280 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,848 (ரூ.175 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,18,784 (ரூ.1,400 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter