+

Gold Rate Chennai: தங்கம் விலையில் மாற்றமில்லை - சவரன் ரூ.74,320-க்கு விற்பனை!

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை என்றாலும், சவரன் விலை ரூ.74,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. அடுத்த சில நாட்களில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த சில தினங்களாக வெகுவாக சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. சவரன் விலை ரூ.74,320 ஆக இருக்கிறது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.5 குறைந்து ரூ.9,290 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.40 குறைந்து ரூ.74,320 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 குறைந்து ரூ.10,135 ஆகவும், சவரன் விலை ரூ.40 குறைந்து ரூ.81,080 ஆகவும் இருந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை என்றாலும், சவரன் விலை ரூ.74,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. அடுத்த சில நாட்களில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் எனத் தெரிகிறது. சுப காரியங்களுக்கு அவசியம் எனில் மட்டும் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (14.8.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.9,290 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.74,320 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10,135 ஆகவும், சவரன விலை ரூ.81,080 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (14.8.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.125 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,25,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

gold rate today

தங்கம் விலை இனி?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீளத் தொடங்கி இருக்கிறது. அதேபோல், பங்குச் சந்தையிலும் எழுச்சி நிலவுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவையும் ஓரளவு குறைந்துள்ளதால், தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி இருக்கிறது. அடுத்த சில நாட்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,290 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,320 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,135 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,080 (மாற்றமில்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,290 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.74,320 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,135 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.81,080 (மாற்றமில்லை)


Edited by Induja Raghunathan

facebook twitter