+

Gold Rate Chennai: அமைதியோ அமைதி காக்கும் தங்கம் விலை - காரணம் என்ன?

ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.2,500 அளவில் சரிந்த நிலையில், இன்று தங்கம் விலையிலும், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏதுமில்லை.

ஆபரணத் தங்கம் விலை இரு தினங்களாக கடுமையாக சரிந்து வந்த நிலையில், இன்று மாற்றமின்றி அமைதி காத்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,11,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,164 ஆகவும், சவரன் விலை ரூ.1,21,312 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.2,500 அளவில் சரிந்த நிலையில், இன்று தங்கம் விலையிலும், வெள்ளி விலையிலும் மாற்றம் ஏதுமில்லை. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (30.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.13,900 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,11,200 ஆகவும் மாற்றமின்றி இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.15,164 ஆகவும், சவரன் விலை ரூ.1,21,312 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (30.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,60,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கம் விலை மாற்றம் இல்லாதது ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.31 ஆக வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் நீடித்துள்ளது. எனினும், இரு தரப்பிலும் இன்னும் அமைதி உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது தங்கம் மீதான முதலீடு ஏற்றமும் இறக்கமுகாக உள்ளதால், ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,900 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,200 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,164 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,312 (மாற்றமில்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.13,900 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,11,200 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,164 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,21,312 (மாற்றமில்லை)


Edited by Induja Raghunathan

facebook twitter