Gold Rate Chennai: சற்றே குறைந்த தங்கம் விலை - புதிய உச்சத்தில் வெள்ளி!

11:29 AM Jan 27, 2026 | Jai s

ஆபரணத் தங்கம் விலை இன்று சற்றே சரிந்தாலும் கூட, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமையும் தங்கம் விலை வெகுவாக உயர்ந்தது. அதன்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15,025 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,20,200 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16,291 ஆகவும், சவரன் விலை ரூ.1,30,560 ஆகவும் விற்பனை ஆனது.

கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. எனினும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு அவசரம் எனில் மட்டும் நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (27.1.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.65 குறைந்து ரூ.14,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.520 குறைந்து ரூ.1,19,680 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 குறைந்து ரூ.16,320 ஆகவும், சவரன் விலை ரூ.568 குறைந்து ரூ.1,30,560 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (27.1.2026) 1 கிராம் வெள்ளி ரூ.11 உயர்ந்து ரூ.387 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.12,000 உயர்ந்து ரூ.3,87,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை இனி?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.80 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு வருவதுடன் சர்வதேச அரசியல் சூழல் பதற்ற நிலை காரணமாக அடுத்தடுத்த நாட்களில் ஆபரணத் தங்கம் விலை உயரக் கூடும் எனத் தெரிகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,960 (ரூ.65 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,680 (ரூ.520 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,320 (ரூ.71 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,560 (ரூ.568 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,960 (ரூ.65 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,19,680 (ரூ.520 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.16,320 (ரூ.71 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,30,560 (ரூ.568 குறைவு)


Edited by Induja Raghunathan