+

கூகுள் மேப்ஸ் சேவையில் ஜெமினி ஏஐ திறன் மூலம் புதிய வசதிகள் அறிமுகம்!

ஜெமினி ஏஐ திறன் கொண்ட வசதியை கூகுள் வரைபட சேவையில் ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என்பதோடு, சாலைகள், கட்டிடங்கள் காட்சிகளை காணலாம்.

Google Maps மூலம் இடங்களை கண்டறிவதிலும், வழிகாட்டுதலை பெறுவதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஜெமினி திறன் கொண்ட மேம்பாடுகளை அறிமுகம் செய்துள்ளதாக ஆல்பபெட் மற்றும் கூகுள் சி.இ.ஓ.சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

ஆஸ்க் மேப்ஸ் மற்றும் இம்மர்சிவ் நேவிகேஷன் எனும் பெயரில் இந்த அம்சங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. மேலும், உரையாடல் தன்மை கொண்ட தேடல் மற்றும் சாலைகள், முக்கிய இடங்களை அவை தோன்றும் வடிவில் காண்பிக்கும் நேவிகேஷன் தோற்றமாக இவை அமைகின்றன.

Gemini

ஆஸ்க் மேம்ப்ஸ் வாயிலாக, டைப் செய்து தேடுவதற்கு பதிலாக பயனாளிகள் சிக்கலான கேள்விகளை இயற்கை மொழியில் கேட்கலாம். கிராண்ட் டெண்டன்சில் சிறந்த 3 மணி நேர குடும்ப ஹைகிங்கின் இடம் மற்றும் பேக் செய்த உணவுக்கான இடம், என பல அடுக்கு கேள்விகளை கேட்டு அதற்கான தெளிவான பதிலை பெறலாம்.

கூகுள் வரைபட சேவையில் உள்ள விமர்சசங்கள், புகைப்படங்கள், திறந்திருந்திருக்கும் நேரம் உள்ளிட்ட தகவல்களில் இருந்து தேவையான விவரத்தை இந்த அம்சம் திரட்டித்தரும். இதன் பின்னே உள்ள ஜென் ஏஐ நுட்பம், வெறும் இணைப்புகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் தெளிவான பதிலை அளிக்க முயலும். பல முனை தகவல்களை திரட்டி ஒரே பதிலாக அளிக்கும்.

கூகுள் பத்தாண்டுகளில் வரைபட நேவிகேஷனில் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய மேம்பாடு இந்த இம்மர்சிவ் வசதி, என சுந்தர்பிச்சை கூறியுள்ளார். இந்த சேவையின் தன்மை மற்றும் அதன் பின்னே உள்ள ஜெமினியின் ஆற்றலை இந்த கருத்து உணர்த்துகிறது.

வழக்கமான தட்டை வரைபட சேவைக்கு பதிலாக அமையும் இம்மர்ஷன் நேவிகேஷன் முப்பரிமான வடிவில் சாலைகள், சந்திப்புகள், கட்டிடங்களை காண்பிக்கிறது. சாலை வழிகாட்டுதல்கள், போக்குவரத்து விளக்குகள் போன்றவற்றை முன்னதாகவே அடையாளம் காட்டி வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் சிக்கலான சூழலை புரிந்து கொள்ள உதவுகிறது.

சாலையில் பயனாளிகள் காணக்கூடிய காட்சிகளுக்கு ஏற்ப இருக்கும் வகையில் ஸ்டீரிட் வியூ மற்றும் வான்வழி காட்சிகளை அலசி இந்த அம்சம் செயல்படுவதாக கூகுள் தெரிவிக்கிறது. சிக்கலான சூழலை எதிர்கொள்ள மற்றும் முக்கிய கட்டிடங்கள் சார்ந்த வழிகளை கையாள இந்த அம்சம் உதவும்.

ஆஸ்க் மேப்ஸ் சேவை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் அறிமுகம் ஆகிறது. டெஸ்க்டாப்பில் பின்னர் அறிமுகம் ஆகும். இம்மர்சிவ் நேவிகேஷன் வசதி மஎரிக்காவில் அறிமுகமாகி பின்னர் மற்ற பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்படும்.

கூகுள் மேப்ஸ் சேவை தொடர்ந்து மேம்பட்டு வந்திருக்கிறது. ஆரம்ப அம்சங்கள் வழி மற்றும் போக்குவரத்தில் கவனம் செலுத்தின. பின்னர் ஸ்டீரிட் வியூ, நிகழ்நேர போக்குபரத்து, பயனர்கள் ரிவ்யூ உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

அண்மை ஆண்டுகளில் கூகுள் ஜெமினி ஏஐ சேவையை வரைபடம் மற்றும் வழிகாட்டுதல் சேவையில் இணைக்கத்துவங்கியது. இது தற்போது வெகுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நிகழ்நேர வரைபடத்துடன் ஜென் ஏஐ சேவையை இணைக்கும் இந்த வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது.

கூகுள் வரைபட சேவையை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதை உரையாடல் தன்மை கொண்டதாக மாற்றி புகைப்படம் சார்ந்த சேவையாக மாற்றுவது வழிகளை திட்டமிட உதவும் என மருதப்படுகிறது.

தேடல் துவங்கி செயல்திறன் சேவைகள் வரை பலவற்றில் ஜெமினியை ஒருங்கிணைக்கும் திட்டத்தை நோக்கிய செயலாகவும் இது அமைகிறது.

ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter