
ஐஐடி மெட்ராசில் உருவாகி இப்போது எச்சிஎல் குழுமத்தின் அங்கமாக இருக்கும் HCL GUVI நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்துடனான கூட்டு உள்ளிட்ட இரண்டு முக்கிய மைல்கற்களை அறிவித்துள்ளது.
எச்சிஎல் டெக்குடன் இணைந்து நடத்திய இந்தியா இம்பேக்ட் பில்டதான் போட்டியின் இறுதி கட்டமும் வெற்றிகரமாக அரங்கேறியது. முறையாக வடிவமைக்கப்பட்ட கற்றல் திட்டங்களில் மேம்பட்ட கருவிகள் மற்றும் செயல்முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஓபன் ஏஐ நிறுவன கூட்டை இந்நிறுவனம் இந்தியா இம்பேக்ட் ஏஐ மாநாட்டில் அறிவித்தது.
இந்தியாவில் ஓபன் ஏஐ தனது இருப்பை விரிவாக்கி வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள் தவிர அதன் நிறுவன அளவிலான தொழில்நுட்பத்தை அளிக்கும் வெகு சில கல்வி நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் குவி அமைகிறது. இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை மாணவர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கு தனது வகுப்புகள் மூலம் வழங்கும்.
இந்த கூட்டு, மாணவர்கள் நவீன உருவாக்க செயல்முறைகள், உலக அளவிலான பணி செயல்முறை, பொறுப்பான பயன்பாடு அணுகுமுறை மற்றும் நிஜ உலகிற்கான வடிவமைப்பு தீர்வுகளை உருவாக்க வழி செய்யும். ஓபன் ஏஐ நிறுவனத்துடன் சர்வதேச அனுபவத்தை Guvi-யின் பயிற்சி சூழலில் இணைத்து இது வழங்குகிறது.
“பெரிய அளவில் வளர்த்தெடுக்கக் கூடிய திறனை உருவாக்குவது இந்திய எதிர்காலத்திற்கு முக்கியம். இம்பேக்ட் பில்டதான் மூலம், கற்றல் பயிற்சி மற்றும் புதுமையாக்கம் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும், என உணர்த்தினோம். ஓபன் ஏஐ நிறுவனத்துடனான கூட்டு இந்த பயணத்தின் அடுத்த கட்டமாக அமைகிறது,” என எச்சிஎல் குவி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அருண் பிரகாஷ் கூறினார்.
“இந்திய இம்பேக்ட் பில்டதான், நிகழ் உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கற்றல் பயிற்சி எவ்வாறு இணைக்கப்படலாம் என உணர்த்தியது. எங்களது, கற்றல், பில்ட் மற்றும் போட்டி மாதிரி, பங்கேற்பாளர்களுக்கு அனுபவத்தையும் நம்பிக்கையையும் வழங்கியது,” என்று இணை நிறுவனர் பாலமுருகன் கூறினார்.
ஏஐ மாநாட்டில், எச்சிஎல் டெக் மற்றும் எச்சிஎல் குவி, மாநாடு அரங்கை, இந்தியாவின் வளரும் தொழில்நுட்ப சூழலை பிரதிபலிக்கும் புதுமையான பகுதியாக மாற்றியது. இந்த பில்டதானில் 40,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் 15,000 குழுக்களாக கலந்து கொண்டனர்.
வழக்கமான ஹேக்கத்தான் போல அல்லாமல், இந்த பில்டதான் போட்டி, முறையான கற்றல் சார்ந்து அமைந்திருந்தது. போட்டியாளர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான சுற்றுகளுக்கு, 200 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் போட்டியாளர்கள் தங்கள் உருவாக்கங்களை காட்சிப்படுத்தினர்.
பில்டதான், இந்தியா ஏஐ சி,இ.ஓ மற்றும் என்.ஐச்.இ இயக்குனர் ஜெனரல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் அபிஷேக் சிங்கால் துவக்கி வைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள், எச்சிஎல் டெக் உயர் நிரவாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Edited by Induja Raghunathan