
இரண்டு ஆண்டுகளுக்கு முன், 'பார்டு' (Bard) சாட்பாட் மூலம் கூகுள் எடுத்து வைத்த தவறான அடிகள், ஏஐ போட்டியில் நிறுவனத்தை வழிநடத்தி, வெற்றி பெறச்செய்ய அதன் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஏற்ற தலைவரா என ஊழியர்கள் மற்றும் விமர்சகர்கள் கேள்வி கேட்க வைத்தது.
2025ல் இதற்கு கூகுள் தனது சேவைகள், விநியோகம் மற்றும் எண்களில் பதில் அளித்துள்ளது.
ஜெமினி சேவை இப்போது தேடல், ஆன்ட்ராய்டு, குரோம் மற்றும் கிளவுட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டீப்மைண்ட் ஆய்வில் முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது. ஆல்பபெட் சாதனை வருவாயை அறிவித்துள்ளது, 3 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்றுள்ளது.
தேடலில் கூகுள் ஏஐ ஓவர்வியூ வசதி 2 பில்லியன் மாத பயனாளிகளை பெற்றுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஜெமினி செயலி லட்சக்கணக்கான மாதாந்திர தீவிர பயனாளிகள் கொண்டுள்ளது.

2013ல் பார்டு பாட்'டின் அவசர அறிமுகம் உள்ளுக்குள் எழுப்பிய விமர்சனத்திற்கு மாறாக இந்த ஆண்டு பல அறிமுகங்கள் நம்பிக்கையோடு நிகழ்ந்துள்ளன.
விநியோக சாதகம்
தேடல்: ஏஐ ஓவர்வியூ சர்வதேச அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. மாதம் 2 பில்லியன் பயனாளிகள் என்கிறது கூகுள்.
ஆன்ட்ராய்டு மற்றும் சாதனங்கள்: மொபைல் பயனாளிகள் கூகுள் அசிஸ்டண்டில் இருந்து ஜெமினிக்கு மேம்பட வைத்துள்ளது.
குரோம், வலை: குரோமில் இப்போது ஜெமினி அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பிரவுசரில் சுருக்கமாக்கல் மற்றும் டாஸ்க் வசதி.
வொர்க்ஸ்பேஸ், கிளவுட்: வொர்க்ஸ்பேசில் மாதம் இரண்டு பில்லியனுக்கு மேல் ஏஐ உதவி செயல்கள் நிகழ்ந்துள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது. வெர்டெக்ஸ் ஏஐ பயன்பாட்டில் ஆண்டு அடிப்படையில் 20 மடங்கு உயர்வு.
யூடியூப், ஊடகம்: வியோ 3 வீடியோ உருவாக்கம் சேவை யூடியூப் ஷார்ட்டில் ஒருங்கிணைப்பு, வெர்டிகள் வீடியோ சப்போர்ட், SynthID மூலம் வாட்டர்மார்க்.
டீப்மைண்ட் மற்றும் ஜெமினி தொழில்நுட்ப அமைப்பு
பல பிரிவுகளில் கூகுள் முன்னிலைக்கு மாறியுள்ளது.
ஜெமினி 2.5 மாதிரி, தனது சிறந்த காரண விளக்க மாதிரி என கூகுளால் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஜெமினி 1.5 சிக்கலான பல நோக்கு பணிகளுக்கு ஒரு மில்லியன் டோக்கன் அமைப்பை அறிமுகம் செய்துள்ளது.
ஆய்வு பரப்பில், டீப்மைண்டின் ஆல்பாபோல்டு3, புரதம், டிஎன்.ஏ, ஆர்.என்.ஏ உள்ளிட்டவற்றில் கணிப்புகளை மேற்கொள்வதை நோக்கி உயிரியலை கொண்டு சென்றுள்ளது. ஆக்கத்திறன் ஊடகத்தில், வியோ3 ஒலி ஒருங்கிணைப்பு கொண்ட வீடியோக்களை உருவாக்குகிறது. ஜெமினி ஏஅபி மற்றும் புளோ டூலிங் மூலம் இது கிடைக்கிறது. ஆய்வில் இருந்து சேவைகள் முதிர்வதை இது உணர்த்துகிறது.

‘நானோ பனானா’ (Nano Banana)
கூகுளின் படங்கள் எடிட் செய்யும் மாதிரியான நானோ பனானா (கூகுள் ஜெமினி 2.5 பிளாஷ் இமேஜ்), பொது அறிமுகத்தில் பின்னடைவை சந்தித்தது. இன்று, இது வெகுஜன ஆதரவை பெற்று, 10 மில்லியன் முதல் முறை ஜெமினி செயலி பயனாளிகளை ஈர்த்துள்ளது, என கூகுள் தெரிவிக்கிறது.
கூகுள் நானோ பனானாவை அனைத்து சேவைகளிலும் இணைத்து வருகிறது. ஜெமினி செயலி, ஏஐ ஸ்டூடியோ ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளது. கூகுள் மெசேஜில் வர உள்ளது. நிறுவனம் எப்படி தனது சேவைகளை ஏற்கனவே உள்ள சேவைகளில் ஒருங்கிணைத்து ஏஐ நுட்பத்தை தினசரி பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
வருவாய்
2025 மூன்றாம் காலாண்டில் 102.3 பில்லியன் டாலர் வருவாயுடன் முதல் முறையாக 100 பில்லியன் டாலருக்கு மேலான காலாண்டை கண்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 16 சதவீத வளர்ச்சி. கூகுள் கிளவுட்டில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
நவம்பரில் நிறுவன பங்குகள் புதிய உச்சம் தொட்டன. முதல் முறையாக ஆல்பபெட் சந்தை மதிப்பீடு 3 லட்சம் கோடி டாலர்களை கடந்தது. இவற்றுடன் நிறுவனம் ஏஐ உள்கட்டமைப்புகான நிதி வசதிக்காக தீவிர மூலதன செலவுகளை மேற்கொள்கிறது.
பொதுவெளியில் ஏஐ முதலீடு சுழற்சி தொடர்பாக சுந்தர் பிச்சை தெரிவிக்கும் கருத்துக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இது நிறுவன நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 2023 பார்டு பின்னடைவு மற்றும் கூகுள் தலைமை மீதான விமர்சனங்களை பின்னுக்குத்தள்ளி கூகுள், ஆய்வு, மாதிரிகள் அறிமுகம், விநியோகம் மற்றும் வருவாய் மூலம் தனது ஆற்றலை நிருபித்துள்ளது.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan