+

'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஏஐ, தரவுகள் மற்றும் சமூக பங்கேற்பு முக்கியம்' - சுப்ரியா சாஹு

சுற்றுச்சூழல் தலைமைக்கான ஐநாவின் உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதை அண்மையில் பெற்றுள்ள சுப்ரியா சாஹு, சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தொழில்நுட்பம், தரவுகள் மற்றும் சமூக பங்கேற்பு தொடர்பாக உரையாடினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு, ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் நிறுவப்பட்ட சுற்றுச்சூழல் தலைமைக்கான ஐநாவின் உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதை இந்த மாதம் பெற்றுள்ளார்.

“இது மிகவும் நெகிழ வைக்கிறது. சுற்றுச்சூழல் உயரிய விருது பெறுவது நன்றி உணர்வு கொள்ள வைத்தாலும், உங்களை அமைதியாகவும், பணிவாகவும் உணர வைக்கிறது," என சோஷியல் ஸ்டோரியிடம் சுப்ரியா சாஹு கூறினார்.
supriya sahu

சுப்ரியா சாஹு

தமிழகத்தின் 1991 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு, பல்வேறு காலநிலை மற்றும் நீடித்த தன்மை முயற்சிகளில் முன்னிலை வகித்துள்ளார்.

2021ல் அவர், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துற கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்ட பின், இத்துறைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

துவக்கம் முதல் அவர் வனபாதுகாப்பில் புதிய வழிகள் காண்பதில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கொள்கை நோக்கில் அதிக முக்கியத்துவம் பெறாத பிரிவுகளில் கவனம் செலுத்துகிறார்.

மனித வனவிலங்கு மோதலை குறைக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தரவுகள் சார்ந்த நிர்வாகத்தை பயன்படுத்துவது, டிரெக் தமிழ்நாடு பரிணாமம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சுப்ரியா சாஹு சோஷியல் ஸ்டோரியிடம் உரையாடினார்.

அவரது நேர்காணலில் இருந்து...

சோஷியல் ஸ்டோரி (எஸ்.எஸ்): வனவிலங்கு நடமாட்டத்தை முன்னதாக கண்டறிந்து, பொதுமக்களுக்கு நிகழ்நேர எச்சரிக்கை அளிக்கும் வகையில் 46 ஏஐ திறன் கொண்ட தெர்மல் காமிரா மூலம் இயங்கும் மற்றொரு ஏஐ சார்ந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தை அண்மையில் தமிழ்நாடு வனத்துறை அறிமுகம் செய்துள்ளது. மோதல் அணுகப்படும் விதத்தை இந்த அமைப்பு எப்படி மாற்றுகிறது? சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஏஐ எப்படி உதவுகிறது?

சுப்ரியா சாஹு (சாஹு): மனித- வனவிலங்கு மோதல் உண்மையில் புதிய பரிமானம் பெறுவதில் காலநிலை மாற்றம் பெரிய தாக்கம் செலுத்துகிறது. ஊடுருவும் தாவிர வகைகள் ஆக்கிரமிப்பதால் வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதை அவசரநிலை அடிப்படையில் எதிர்கொண்டாக வேண்டும். இந்த வகை தாவிரங்களை அகற்றினால், வனத் தாவிரங்கள் மற்றும் புற்களை மீண்டும் நிலை நிறுத்தலாம்.

சத்யமங்கலம் மற்றும் முதுமலை பகுதிகளில் 34,000 ஹெக்டேர் உண்ணிச்செடி மற்றும் நிலவாவிரை செடிகளை அகற்றியுள்ளோம். இதனால் புற்கள் திரும்பியுள்ளன. ஆனால், இது ஒரு தொடர் போராட்டம். மேலும் அதிக வெப்பம், திடீர் வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை வனவிலங்குகள் பழகிய பருவகால அமைப்புகளை மாற்றி வருகின்றன.

இவற்றின் காரணமாக, வழக்கமான கண்காணிப்பு முறை பயன் தருவதில்லை. மக்கள் தொகை மாற்றம் மற்றும் மக்கள் நடமாட்டம் காரணமாக, விளிம்பு நிலை வனப்பகுதிகளில் குப்பைகள் குவிதல், மக்குவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.

இப்போது புதிய தொழில்நுட்பம் இருப்பதால், மதுக்கரையில் ரெயில் பாதையில் ஏஐ நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம் மற்றும் கூடலூரில் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து நிகழ்நேர தகவல் அளிக்க தெர்மல் காமிரா பொருத்தியுள்ளோம்.

எஸ்.எஸ்: வனவிலங்கு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மரைன் எலைட் போர்ஸ், மீனவர்களை அமைப்பு நோக்கிலான மரைன் பாதுகாப்பு அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளது. சமூகத்திற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதைவிட சமூக பங்கேற்புடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேற்கொள்ளும் போது களத்தில் என்ன நிகழ்கிறது?

சாஹு: இந்த படையில் உள்ள கண்காணிப்பாளர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்கள் அழகான உள்ளூர் கிராமத்தில் இருந்து வருவதை புரிந்து கொள்ளலாம். இந்த படையில் சேர்ந்தது பற்றி நான் கேட்ட போது, இந்த குழுவின் 11 பேர், கடல் பாதுகாப்பில் ஈடுபட்டு அதன் மூலம் புதியவற்றை கற்றுக்கொள்வதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தனர்.

சமூகம் ஈடுபடும் போது தகவல் தொடர்பு எளிதாகிறது. சட்டவிரோத மீன் பிடித்தல் மொத்த சூழலையும் பாதிப்பது பற்றி அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றனர்.

Supriya Sahu

எஸ்.எஸ்: எதிர்காலத்தை நோக்கி செல்லும் போது, பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தரவுகள் சார்ந்த நிர்வாகம் எந்த அளவு முக்கியமாக இருக்கும்?

சாஹு: முன்னோட்ட திட்டங்களை விரிவாக்க, பெரிய அளவில் மேற்கொள்ளும் போது, சான்றுகள், தரவுகள் இல்லை என்றால் சரியான திசையில் செல்வதை உறுதி செய்து கொள்வது எப்படி?

உதாரணமாக, தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள் ஜியோடேக் செய்யப்பட்டுள்ளன. நாளை, உள்ளூர் சமூகத்திற்காக கார்பன் கிரெடிட் திட்டம் செயல்படுத்த வேண்டும் எனில், மொத்த பரப்பு தொடர்பான அடிப்படை தரவுகள் தேவை.

அரசு மற்றும் சமூகத்திற்கு பலன்களை கொண்டு வர தரவுகள் முக்கியம். காலநிலை திட்டத்தில் பலன்களை அறுவடை செய்ய தரவுகள் வேண்டும். தரவு புள்ளிகள் இல்லாமல் காலநிலை பலன்களை அணுக முடியாது. மேலும், தரவுகளை பயன்படுத்துவதால், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, சிறந்த திட்டமிடல், கொள்கை வகுத்தல் உள்ளிட்ட இணை பலன்கள் கிடைக்கும்.

எஸ்.எஸ்: கடந்த சில ஆண்டுகளில் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை அணுகுவதில் மக்கள் மற்றும் தொழில்நிறுவனங்களிடையே காணப்படும் மாறுதல்கள் என்ன?

சாஹு: நான் சில உதாரணங்களை தருகிறேன். தொழில்களுக்கான பசுமை ரேட்டிங் முறையை அறிமுகம் செய்தோம். நீடித்த செயல்முறை அல்லது தொழில்களில் சுழற்சி தன்மையை பின்பற்றுவதற்காக எண்ணிக்கை மற்றும் ரேட்டிங்கை குறிப்பிட்டு மாசுக்கட்டுப்பாடு வாரியம், அரசு சான்றிதழ் அளிப்பதாக இது அமைகிறது. இத்தகைய ரேட்டிங் முதல் முறையாக அளிக்கப்படுகிறது.

குறுங்காடு திட்டம் மூலம், நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத நிலப்பகுதியை வனத்துறை அளிக்கும் உள்ளூர் தாவிரங்கள் கொண்டு குறுங்காடுகளாக மாற்ற வைக்கிறோம். 20க்கும் மேலான கிராம சதுப்புநில குழுக்களை அமைத்துள்ளோம்.

எஸ்.எஸ்.: கோழிகமுத்தி பாகன் கிராமம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் மையமாக பாகன்களை வைக்கிறது. கண்ணியம், வீட்டுவசதி, நலன் ஆகியவற்றை வனக்கொள்கையில் முக்கியமாக கருதுவது ஏன்?

சாஹு: நீடித்த தன்மை கொள்கையின் முக்கிய அம்சமாக கண்ணியம் அமைகிறது. இவர்கள் தலைமுறைகளாக யானைகளை பார்த்துக்கொள்கின்றனர். அவர்கள் பணியை அங்கீகரிப்பது முக்கியம். ஒருவர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்பணிக்கும் போது, அதை எவ்வாறு அங்கீகரிக்கிறீர்கள் என்பது முக்கியம். அவர்களில் பலருக்கு முதல் விமான பயணம், முதல் சென்னை பயணம் மற்றும் வெளிநாட்டு பயணமாக அமைந்தது.

எஸ்.எஸ்: தமிழ்நாட்டின் இன்னொரு திட்டத்தில் பெண்கள் பங்கேற்பு அதிகம் உள்ளது. சமூகம் சார்ந்த பாதுகாப்பில் பெண்கள் தலைமை கொண்டு வரும் மாற்றங்கள் என்ன?

சாஹு: அவர்கள் முதன்மையாக கொண்டு வருவது அனுபவ அறிவு. பொதுவாக சூழலியல் மற்றும் இயற்கை அமைப்புகளை ஆண்கள் தான் சரியாக புரிந்து கொள்வதாக கருதப்படுகிறது. ஆனால், பெண்கள் அதிகம் அறிந்துள்ளனர். தங்கள் சூழலில் உள்ள பூச்சிகள், புற்கள், விலங்குகளுடன் அவர்கள் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலான பணிகள் செய்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இயற்கையுடனான அவர்கள் தொடர்பு ஆழமாகிறது. சிறிதளவு பயிற்சியுடன் விஷயங்களை புரிந்து கொண்டு செயலாக்கும் அவர்களின் திறன் வியக்க வைப்பது.

Sahu

பெண்கள் சம்பாதிக்கும் போது அவர்கள் வருமானம் நேரடியாக குடும்பத்திற்கு செல்கிறது. குழந்தைகள் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நாம் மேற்கொள்ளக்கூடிய முக்கிய முதலீடுகளாக அவை அமைகின்றன.

டிரெக் தமிழ்நாடு திட்டத்தில் பெண்களை ஈடுபடுத்தியிருப்பது எங்கள் மதிப்பை உயர்த்தியுள்ளது. இவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், அனுபவ அறிவு, நம்பகத்தன்மை மற்றும் ஆழமான ஈடுபாட்டை உணர்த்துகின்றன.

எஸ்.எஸ்: சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் கடந்த ஆண்டுகள் உங்களுக்கு கற்றுத்தந்துள்ள விஷயங்கள் என்ன?

சாஹு: என் தனிப்பட்ட கற்றல் மூன்றுவிதமாக அமைகிறது. மாநில செயல்பாடுகள் பலன் தர வலுவான அரசியல் உறுதி தேவை. இந்த உறுதி கொள்கை முடிவுகள் மற்றும் வளங்கள் ஒதுக்கீட்டில் வழிகாட்டுகிறது.

இரண்டாவதாக, கொள்கை முடிவுகள், நிதி சாத்தியமானவுடன் செயலாக்கத்தில் உண்மையான சவால் இருக்கிறது. இதற்கு ஈடுபாடு மிக்க அதிகார அமைப்பு மற்றும் துடிப்பான அமைப்பு தேவை. மாவட்ட கலெக்டர்கள், வன அதிகாரிகளுடன் நெருக்கமான செயல்பட்டு ஒவ்வொரு திட்டத்திற்கான துடிப்பான தன்மையை உண்டாக்கினோம்.

மூன்றாவதாக, உள்ளூர் சமூகம் மற்றும் மக்களின் தொடர் ஆதரவு முக்கியம். அவர்கள் ஈடுபாடு மற்றும் ஊக்கம் அமைப்பு சரியான திசையில் செல்ல தூண்டுகோளாகிறது.

ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷணன், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter