இந்திய இளம் ஸ்டார்ட் அப்கள் தங்கள் இலட்சியங்களை தனியார் சந்தைக்கு விற்ற ஆண்டாக 2021 அமைந்தது என்றால், 2025 அவற்றிடம் சந்தை பதில் கோரிய ஆண்டாக அமைந்தது. பல ஆண்டுகள் மிகை மதிப்பீட்டிற்கு பிறகு, மூலதனம் கடினமாகி, ஐபிஓ மீதான ஆய்வு தீவிரமானது. வர்த்தக தரம் மற்றும் நீடித்த தன்மைக்கான இறுதி நீதிபதியாக பட்டியலிடப்பட்ட சந்தை அமைந்தது.
இந்த ஆண்டு இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க பட்டியலிடப்பட்ட இணைய மற்றும் புது யுக நிறுவனங்களின் செயல்பாடுகள், பளபளப்பான, எப்படியும் வளர்ச்சி அடைவது எனும் அணுகுமுறையில் இருந்து, செயல்பாடு தெளிவும், லாபம் மற்றும் துறையில் முன்னணி ஆகியவற்றை நோக்கியாதாக அமைந்திருந்தது.
இந்த ஆண்டு வலுவான செயல்பாடுகளை கொண்டிருந்த ஒவ்வொரு முன்னணி நிறுவனமும், லாபத்தன்மை அல்லது, அதை நோக்கிய பாதையை கொண்டிருந்தது. மேலும், பல திசைகளில் சென்று கொண்டிருந்த நிறுவனங்களை விட கவனம் கொண்ட நிறுவனங்கள் நல்ல செயல்பாட்டுடன் விளங்கின.
வெற்றி நிறுவனங்கள்:
செயல்பாட்டில் முன்னணியில் இருப்பது ஏத்தர் எனர்ஜி (Ather Energy). இதன் பங்குகள் இந்த ஆண்டு ~132% உயர்வு கண்டது. மேம்படும் லாபவிகிதம், முன்வாகன ஏற்பு பாதை மற்றும் அதிக ரொக்கம் செலவில்லாமல் வளர்ச்சி வாய்ப்பு முதலீட்டாளர்களை கவர்ந்தது.
லாபத்திற்கான நீண்ட கால பாதையை விட, ஏத்தர் நிறுவனத்தின் ரொக்க கட்டுப்பாடு மற்றும் தெளிவான வளர்ச்சிப்பாதை சாதகமாக அமைந்தது.
மீஷோ (Meesho) : அடுத்த இடத்தில் இருப்பது இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட ஐபிஓவான மீஷோ. பட்டியலிடப்பட்ட பிறகு இதன் பங்குகள் 95 சதவீதம் உயர்ந்தது. இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக ரொக்கத்தை இறைத்துக்கொண்டிருக்க வேண்டும், எனும் போக்கிற்கு சவால் விடும் வகையில் அமைந்தது.
நைகா (Nykaa) : அழகு சாதனம் மற்றும் பேஷன் மேடையான நைகா, 54 சதவீத பலனுடன் தெளிவான மீட்சி கண்டது. ரொக்க வரத்து, வலுவான பிராண்ட், ஆம்னிசேனல் வழி ஆகியவை சாதகமாக அமைந்தன.
நிதிநுட்ப நிறுவனங்கள்
நிதிநுட்ப பிரிவில், வெற்றி பெற்ற நிறுவனங்கள் மற்றும் தடுமாறும் நிறுவனங்கள் இடையிலான வேறுபாடு தெளிவாக இருந்தது. ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், (பேடிஎம்), நஷ்டத்தை குறைத்து, லாப பாதையை கண்டறிந்து, அதன் பங்குகள் 34 சதவீத பலன் அடைந்தது. நிதி நுட்ப நிறுவனங்கள் மதிப்பீடு பயனாளிகள் எண்ணிக்கையை மட்டும் சார்ந்திருக்கும் நிலை மாறியது.
க்ரோ (Groww) : Groww பட்டியலிடப்பட்ட பின், 43 சதவீத ஆதாயம் மற்றும் ஒரு லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டிற்கான பயணம், நிதிநுட்ப நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை உணர்த்தியது. இரண்டு முறை குறுகிய கால ஏற்றத்துடன், அதன் பங்குகள் 25 சதவீத பலன் கண்டுள்ளது.
பலவீனமான செயல்பாடுகளை கொண்ட மற்ற நிதி நுட்ப நிறுவனங்கள் சந்தையின் தீவிர எதிர்பார்ப்பை உணர்த்துகின்றன.
கட்டுப்பாடு, லாபம்
சீரான செயல்பாடுகள், குறைந்த லாப விகிதம் ஆகிய அம்சங்கள் கொண்ட பிரிவில் செயல்படும் நிறுவனங்களுக்கு லாபம், பெரிய அளவிலான வளர்ச்சியில் இருந்து அல்லாமல், கட்டுப்பாடு மிக்க செயல்பாடு, விநியோக சீரமைப்பு மற்றும் மேம்பட்ட லாப தன்மை ஆகியவற்றில் இருந்து வரும் என நிருபனமானது.
டெல்ஹிவரி (Delhivery) : 18 சதவீத பலன் கண்ட நிறுவன பங்குகள், செயல்பாடுகள் சீராக இருந்தால் லாஜிஸ்டிக்ஸ் நுட்ப நிறுவனம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என உணர்த்தியது.
பிசிக்ஸ்வாலா (PhysicWallah) : வலுவான பட்டியலிடப்பட்ட தன்மையை மீறி, 13.6 சதவீதம் சரிந்துள்ளது. நீடித்த வருவாய் வளர்ச்சி, குறையும் நஷ்டம் மற்றும் ஹைப்ரிட் மாதிரி ஆகிய அம்சங்கள் முதலீட்டாளர்களை கவர்ந்தன.
அர்பன்கம்பெனி (UrbanCompany) : நிறுவன பங்குகள் 25 சதவீதம் சரிவு கண்டுள்ளன. இதன் பட்டியல்தின ஆதாயம் தலைகீழாக மாறியுள்ளது. அதன் முந்தைய லாப காலாண்டிற்கு மாறாக இரண்டாம் காலாண்டு முடிவுகள் நஷ்டத்தை கொண்டிருந்தது.
நுகர்வோர் இணையம்
ஹோனாசா கன்ஸ்யூமர் (MamaEarth) : 7 சதவீத பலன் கண்டது. இந்த பங்கு முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தவில்லை, அச்சத்திலும் தள்ளவில்லை.
ஜொமேட்டோ (Eternal) : 3.5 சதவீத பலன் மட்டுமே கண்டது. எனினும், இதன் சந்தை மதிப்பீடு 27 சதவீதம் உயர்ந்தது.
இதனிடையே, ஸ்விக்கி, 27 சதவீத சரிவு கண்டது. முதல் கலாண்டு நிகர நஷ்டம் கொண்டிருந்தது. பொதுவாக லாபவிகிதம் எட்டாக்கனியாக உள்ள நிலையில் போட்டி தீவிரமாக உள்ளது.
மறையும் லாபவிகிதம்
பட்டியலின் கீழ் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக், பிரைன்பி சொல்யூஷன்ஸ் (FirstCry) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. சந்தை பொறுமை எங்கெல்லாம் காணாமல் போயிருக்கின்றது என்பதை உணர்த்துகின்றன. அதிக முதலீடு தேவை, செயல்பாடு தவறுகள், தெளிவில்லாத லாப பாதை சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.
ஓலா எலெக்ட்ரிக் முதலீட்டாளர்களுக்கான கடுமையான பாடங்களில் ஒன்றாக அமைகிறது. அதன் பங்குகள் 62 சதவீதம் சரிந்துள்ளது. சந்தை மதிப்பீடு குறைந்துள்ளது. வளர்ச்சி மட்டும் போதாது, மூலதன ஒழுக்கம் அவசியம், என சந்தை கருதுகிறது.
வலுவான பிராண்ட் தோற்றம் கொண்ட ஃபர்ஸ்ட் கிரை, நிலையான லாபமாக செயல்பாடுகளை மாற்ற முடியாமல் தடுமாறுகிறது.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan