+

திருச்சியை பூர்வீகமாக கொண்ட 11 வயது இந்திய வம்சாவளி பெண் இங்கிலாந்தில் செஸ் போட்டியில் சாதனை!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சதுரங்க சிறுமி போதனா சிவானந்தன், சமீபத்திய FIDE மதிப்பீட்டு பட்டியலில் இங்கிலாந்தின் முதலிட பெண் வீராங்கனையாக உயர்ந்துள்ளார். வட லண்டனில் வசிக்கும் 11 வயதான போதனா, தற்போது 2366 FIDE மதிப்பெண்களுடன் முன்னிலை வகிக்கிறார். இதன் மூலம் நான்கு முறை பிரிட்டிஷ் மகளிர் சாம்பியனா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சதுரங்க சிறுமி போதனா சிவானந்தன், சமீபத்திய FIDE மதிப்பீட்டு பட்டியலில் இங்கிலாந்தின் முதலிட பெண் வீராங்கனையாக உயர்ந்துள்ளார்.

வட லண்டனில் வசிக்கும் 11 வயதான போதனா, தற்போது 2366 FIDE மதிப்பெண்களுடன் முன்னிலை வகிக்கிறார். இதன் மூலம் நான்கு முறை பிரிட்டிஷ் மகளிர் சாம்பியனான லான் யாவோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். போதனாவின் பெற்றோர் திருச்சியைச் சேர்ந்தவர்கள், இவர்கள் 2007ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

மேலும், உலகின் முன்னணி 100 மகளிர் சதுரங்க வீராங்கனைகளின் பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள அவர், தற்போது 72-வது இடத்தில் உள்ளார் என்று இங்கிலாந்து சதுரங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

2020 கொரோனா ஊரடங்கு காலத்தில், தந்தை தூக்கி எறிய நினைத்த சதுரங்க பலகையை பயன்படுத்தி விளையாடத் தொடங்கிய போதனா, குறுகிய காலத்திலேயே அபார முன்னேற்றம் கண்டுள்ளார்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், அவருக்கு வாழ்த்து தெரிவித்து,

“டவுனிங் ஸ்ட்ரீட் தோட்டத்தில் நாங்கள் ஒருமுறை சதுரங்கம் விளையாடியுள்ளோம். அவரது சாதனை எனக்கு ஆச்சரியமல்ல,” என்று ‘X’ தளத்தில் பதிவிட்டார்.
Bhodana Sivanandan

கடந்த ஆண்டு ‘Woman International Master’ பட்டத்தை பெற்ற போதனா, கிரீஸின் ரோட்ஸ் நகரில் நடைபெற்ற European Club Cup போட்டியில், உக்ரைன் முன்னாள் உலக சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் மரியா முசிசுக்கைத் தோற்கடித்துள்ளார்.

“சதுரங்கத்தில் பெண்கள் மற்றும் இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக திகழும் போதனா, இங்கிலாந்தின் மிக திறமையான இளம் வீரர்களில் ஒருவராக இருக்கிறார்,” என்று இங்கிலாந்து சதுரங்கக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் வால்ஷ் தெரிவித்துள்ளார்.

போதனாவின் இந்த சாதனை, உலக செஸ் அரங்கில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

facebook twitter