+

தென்னிந்திய திரைத்துறையில் ரூ.4,000 கோடி முதலீடு - தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்!

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, பிரபள பொழுதுபோக்கு ஓடிடி தளம் JioHotstar அடுத்த 5 ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த பிரம்மாண்ட அறிமுக விழாவில், தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு கடிதத்தில் கையெழுத்த

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, பிரபல பொழுதுபோக்கு ஓடிடி தளம் JioHotstar அடுத்த 5 ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த பிரம்மாண்ட அறிமுக விழாவில், தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு கடிதத்தில் கையெழுத்திட்டது.

ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய ‘South Unbound' என்ற இந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர், பத்ம பூஷண் நடிகர் கமல்ஹாசன், தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளின் புகழ்பெற்ற பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இது இந்த நிகழ்வின் பிரம்மாண்டத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.

ஜியோஸ்டார் நிறுவனத்தின் SVOD பிரிவுத் தலைவர் மற்றும் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம், மற்றும் ஜியோஸ்டார் நிறுவனத்தின் தெற்குப் பிரிவு (பொழுதுபோக்கு) தலைவர் கிருஷ்ணன் குட்டி, மற்றும் நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

JiohotStar-ன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் JiohotStar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டாண்மை தமிழ்நாட்டின் படைப்பு, தயாரிப்பு சூழலமைப்பை விரிவுப்படுத்தி, தென்னிந்திய படைப்பாளிகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

Jiohotstar - South Unbound

ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசுடன் கூட்டு

தமிழக அரசின் படைப்பு மற்றும் தயாரிப்புச் சூழலை விரைவுபடுத்துவதற்கான பொதுவான பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தமிழக அரசுடன் ஒரு உறுதிமொழி கடிதத்தில் (Letter of Intent) கையெழுத்திட்டது. அதில்,

JioHotstar அடுத்த 5 ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டுறவின் ஒரு பகுதியாக, ஜியோஹாட்ஸ்டார் மாநிலத்தின் படைப்புப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த முதலீடு; வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

“JioHotstar-உடன் மேற்கொள்ளப்படும் இந்தக் கூட்டாண்மை 1,000 நேரடி வேலைகள் மற்றும் 15,000 மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். சினிமாவுடன் இணைந்து வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது,” என நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று ஓடிடி பிளாட்பார்ம்கள் தென்னகத்தின் கதைசொல்லிகளின் படைப்புகளுக்கான சிறந்த களமாக அமைந்துள்ளது. இன்றும் ‘உள்ளடக்கமே ராஜா’ என்ற அடிப்படையில், இளம் படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

”மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் உடனான இந்த முயற்சியில், அடுத்த தலைமுறைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள் மற்றும் டிஜிட்டல் கதைசொல்லிகளை ஊக்குவித்து, வளர்ப்பதற்காக ஆய்வகங்கள், வழிகாட்டித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்குகள் போன்ற படைப்பாளர்களை மையமாகக் கொண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த அடுத்த அத்தியாயத்தின் குறியீட்டுத் தொடக்கமாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென்னிந்தியப் பொழுதுபோக்கின் எதிர்காலத்திற்கான துணிச்சலான பார்வையை வெளிப்படுத்தும் வகையில், ஜியோஹாட்ஸ்டாரின் 25 புதிய தலைப்புகளைக் கொண்ட பிளாக்பஸ்டர் தென்னிந்தியப் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நடிகர் கமல்ஹாசன்,

“இன்று, கதைகள் உண்மையில் திரையைப் பொருட்படுத்துவதில்லை. அவை பார்வையாளருடன் பயணிக்கின்றன. பார்வையாளரே தளமாகிவிட்டார். அது நிகழும்போது, ஊடகத்திற்கும் செய்திக்கும் இடையிலான உறவு நிரந்தரமாக மாறுகிறது. கதைகள் எந்தத் திரைக்கும் சொந்தமானவை அல்ல; அவை எப்போதுமே கேட்பவருடன் பயணிக்கின்றன, மேலும் மக்களுக்குச் சொந்தமானவை. திரைகள் அவற்றைப் பின்தொடர்கின்றன, என்றார்.

”இன்று, பிராந்தியம் புதிய தேசியமாகவும், இனவியல் புதிய சர்வதேசமாகவும் மாறி வருகிறது. மதுரை, மலப்புரம், மாண்டியா அல்லது மச்சிலிப்பட்டினத்தில் பிறந்த கதைகள் இனி 'பிராந்திய சினிமா' அல்ல - அவை தேசிய கலாச்சார நிகழ்வுகள். இனி இந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் அந்தந்த மொழி அடிப்படையில் இல்லாமல், இந்திய படங்களாக வெளியாகும். காந்தாரா, த்ரிஷ்யம், போன்ற படங்கள் அதற்கு சான்று,” என்றார்.
South Unbound

ஜியோஸ்டார் நிறுவனத்தின் SVOD வணிகப் பிரிவுத் தலைவர் மற்றும் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம், இந்தக் கனவை விவரிக்குவது பற்றி பகிர்கையில்,

“தென்னிந்தியாவின் வளமான கதைசொல்லும் பாரம்பரியமும், இந்தியாவின் கதைசொல்லும் கலாச்சாரத்தின் மீதான அதன் மிகப்பெரிய தாக்கமும், ஒவ்வொரு பார்வையாளரின் ரசனைகளை தூண்டுவதாக அமைகிறது. சிறந்த பன்முகத்தன்மை, அணுகல்தன்மை மற்றும் சிறந்த அனுபவங்களை வழங்கும்போது, வளமான, உண்மையான மற்றும் வேரூன்றிய கதைகளைத் தொடர்ந்து ஆதரிக்க எங்களைத் தூண்டுகிறது,” என்றார்.

தெற்கின் படைப்பு எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையை மேலும் எடுத்துரைத்த ஜியோஸ்டார் நிறுவனத்தின் தெற்குப் பிரிவு (பொழுதுபோக்கு) தலைவர் கிருஷ்ணன் குட்டி,

“தெற்கு எப்போதும் ஒரு படைப்பு மையமாக இருந்து வருகிறது. இங்குப் பிறக்கும் கதைகள் துணிச்சலானவை, படைப்பாளிகள் அச்சமற்றவர்கள், மேலும் பார்வையாளர்கள் நாட்டில் வேறெங்கிலும் இல்லாத அளவிற்கு ஆர்வம் கொண்டவர்கள். திறமை, உள்கட்டமைப்பு மற்றும் புதிய கதைசொல்லல் வடிவங்களில் அர்த்தமுள்ள, நீண்ட கால முதலீடுகளை இந்தச் சூழலில் செலுத்த எங்கள் உறுதிப்பாடு உள்ளது,” என்றார்.

கடந்த பத்து மாதங்களில், 500க்கும் மேற்பட்ட படைப்பாளிகள், இயக்குநர்கள் மற்றும் ஷோ-ரன்னர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். ஒவ்வொருவரும் இந்தியா முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் கேட்கப்பட வேண்டிய ஒரு குரலைக் கொண்டு வருகின்றனர். தெற்கில் உள்ள ஒவ்வொரு படைப்பாளியும் பெரிய கனவு காணவும், விரைவாக உருவாக்கவும் மற்றும் அவர்களின் கதைகளை முன்பைவிட மேலும் கொண்டு செல்லவும் நாங்கள் விரும்புகிறோம்.

'South Unbound’ என்பது இந்தப் பிராந்தியத்தின் படைப்பு சக்தியை உயர்த்துவதற்கும், இந்தக் கதைகள் செல்ல வேண்டிய தூரம் வரை செல்வதை உறுதி செய்வதற்கும் நாங்கள் அளிக்கும் வாக்குறுதியாகும், என்றார் கிருஷ்ணன் குட்டி.

ரூ.4,000 கோடி முதலீட்டுடன் தமிழ்நாடு மாநிலத்துடன் தொடங்கிய இந்த கூட்டாண்மை, தென்னிந்திய திரைப்படத்துறைக்கும் அதன் படைப்பாளிகளுக்கும் புதிய வாய்ப்புகளையும், உலகளாவிய விரிவாக்கத்தையும் தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

More News :
facebook twitter