+

இந்தியாவில் தொழில்நுட்ப வல்லுனர்கள் வேலைவாய்ப்பு ஏப்ரலில் 8% சரிவு - Xpheno அறிக்கை கூறும் காரணம் என்ன?

ஏப்ரல் 2026-ல் டெக்னாலஜி தொழில்வல்லுநர்களுக்கான தொடக்க வேலை வாய்ப்புகள் 8 சதவீதம் சரிந்துள்ளதாக Xpheno ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சை விட இது சரிந்ததர்குக் காரணம் மேற்கு ஆசிய புவி அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளே என்கிறது இந்த அறிக்கை. Xpheno சிறப்பு நிபுணத்துவ பணியாளர்களுக்கான நிறுவ

ஏப்ரல் 2026-ல் டெக்னாலஜி தொழில்வல்லுநர்களுக்கான தொடக்க வேலை வாய்ப்புகள் 8 சதவீதம் சரிந்துள்ளதாக Xpheno ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சை விட இது சரிந்ததர்குக் காரணம் மேற்கு ஆசிய புவி அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளே என்கிறது இந்த அறிக்கை.

Xpheno சிறப்பு நிபுணத்துவ பணியாளர்களுக்கான நிறுவனமாகும். இது தன்னுடைய 'Active Tech Jobs Outlook – April 2026' என்னும் தலைப்பிட்ட அறிக்கையில் ஜனவரி, பிப்ரவரி 2026-ல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு இருந்த கிராக்கி அதன் பிறகு சரிவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு, அதாவது ஏப்ரல் 2025-ஐ ஒப்பிடுகையில் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் 7% அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த 4 காலாண்டுகளாகவே செயல்பூர்வமான தொடக்க வேலை வாய்ப்புகள் தொழிலுநுட்பத் துறையில் மந்தமாக இருப்பதாகவே இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவின் நடப்பு திறன் தேவையில் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு 49% ஆக உள்ளது. இது 50%-க்குக் கீழ் டிசம்பர் 2025க்குப் பிறகே இறங்கியிருப்பது இப்போதுதான், என்கிறது எக்ஸ்பீனோ அறிக்கை.
Xpheno Report

ஏப்ரல் 2026-இல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளின் “புதுமை குறியீடு” (Freshness Index) 42% ஆக உள்ளது. அதாவது, மொத்த வேலை வாய்ப்புகளில் கிட்டத்தட்ட பாதி, கடந்த இரண்டு வாரங்களில் வெளியிடப்பட்டவையோ அல்லது புதுப்பிக்கப்பட்டவையோ ஆகும். இதனை ஒப்பிடுகையில், மார்ச் 2026-இல் இது 39% ஆகவும், கடந்த ஆண்டின் இதே காலத்தில் 44% ஆகவும் இருந்தது. மாதாந்திர அளவில் இந்த உயர்வு, நிதியாண்டு முடிவை அணுகும் நிலையில் பல நிறுவனங்கள் தங்களது ஆட்சேர்ப்பு செயல்முறைகளை புதுப்பித்ததன் விளைவாக ஏற்பட்டதாகும்.

மத்திய-மூத்த நிலை (mid-senior) பணியிடங்கள் மொத்த வேலை வாய்ப்புகளில் 54% ஆக உள்ளன. ஆனால், இவ்வகை பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 6% குறைந்துள்ளது. 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட ஆரம்ப நிலை (entry-level) தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் மார்ச் 2026-இல் 15,000 ஆக மாறாமல் இருந்தன. ஆண்டு அளவில் பார்க்கும்போது, இவ்வகை வேலை வாய்ப்புகள் 11% குறைந்துள்ளன.

தொழில்நுட்பத் திறனாளர்களை அதிகமாக நியமிக்கும் ஐடி சேவை நிறுவனங்களின் தேவை மாதாந்திர அடிப்படையில் 7% குறைந்து, மொத்தம் 43,000 வேலை வாய்ப்புகளாக உள்ளது. ஆண்டு அளவில் பார்க்கும்போது, ஏப்ரல் 2025-இன் தேவையுடன் ஒப்பிடுகையில் இது 7% குறைவாக உள்ளது. சந்தை நிலைமைகள் தொடர்ந்து இந்தியாவின் ஐடி சேவை துறையில் ஆட்சேர்ப்பு செயல்பாடுகளை பாதித்து வருகின்றன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

ஜிசிசி (GCCs) நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனாளர்களுக்கான செயலில் உள்ள தேவை 15,000 ஆக உள்ளது. இது மொத்த தொழில்நுட்ப தேவையின் 14% ஆகும். ஆனால், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 21% குறைந்துள்ளது. அதே சமயம், ஆண்டு அளவில் பார்க்கும்போது ஜிசிசி நிறுவனங்களின் தேவையில் 3% உயர்வு பதிவாகியுள்ளது.

தொகுப்பு: முத்துகுமார்

facebook twitter