
ஐஏஎன் குழுமத்தின் அங்கமான ஐஏஎன் ஏஞ்சல் ஃபண்ட், அடுத்த தலைமுறை விண்வெளி போக்குவரத்து நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் InterCosmos–ல் ஆரம்ப நிலை நிதிச்சுற்றில் முதலீடு செய்துள்ளது.
இந்த நிதி, நிறுவனம் தனது முன்னணி பிரப்ல்யூஷன் நுட்பமான ஹைபர் எக்சை வளர்த்தெடுக்கவும், முதல் இன் பிளைட் காட்சி விளக்கத்திற்கு தயாராகவும் பயன்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.கோகுல் மற்றும் இணை நிறுவனரும், சி.ஓ.ஓவுமான அரவிந்த சாமி ஆகியோரால் துவக்கப்பட்ட ’இண்டர்காஸ்மாஸ்’ (InterCosmos) விண்வெளித்துறையின் நீண்ட கால பிரச்சனையான, செயல்திறன் பாதிக்காத வகையில் மேலும் நம்பகமான, எளிதாக இயக்கக் கூடிய புரபல்யூஷன் அமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
உலக அளவில் விண்வெளித் திட்டங்கள் மற்றும் செயற்கைகோள் செலுத்துவது அதிகரிக்கும் நிலையில், புரபல்யூஷன் முக்கியமாகிறது. இணை நிறுவனர்கள், எல்பிஎஸ்சி/இஸ்ரோவில் பயிற்சி ஊழியர்களாக இருந்த போது, ராக்கெட் பிரபல்யூஷன் தொடர்பான அனுபவத்தை பெற்றனர்.
தற்போது பெறப்பட்டுள்ள நிதி, நிறுவனத்தின் ஹைபர் எக்ஸ் நுடபத்தின் முதல் இன் பிளைட் காட்சி விளக்கத்திற்கு பயன்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹைபர் எக்ஸை நிஜ உலக விண்வெளித்திட்டங்களுக்கு தயார் செய்யும். நீள்வட்டப்பாதையில் நிறுவனம் தனது செயல்பாட்டை நிரூபிப்பதில் கவனம் செலுத்துகிறது. இது முக்கிய மைல்கல்லாக அமையும்.
ஐஏஎன் ஏஞ்சல் ஃபண்ட் அளிக்கும் நிதி, இந்திய விண்வெளித்துறையில் அதிகரித்து வரும் முதலீடு ஆர்வத்தை உணர்த்துகிறது. மேலும், இது ஐஏஎன் குழுமத்தின் (IAN Group’s) ஆழ் நுட்ப கவனம் மற்றும் ஆரம்ப நிலை முதலீட்டில் கவனம் செலுத்துவதை உணர்த்துகிறது.
சென்னையை தலைமையகமாகக் கொண்டு, திருவனந்தபுரத்தில் செயல்படும் இண்டர்காஸ்மாஸ், செயற்கைகோள் உற்பத்தியாளர்கள், விண்கல உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பான நம்பகமான புரபல்யூஷன் அமைப்புகள் தேவை.
“எங்கள் நுட்பத்தின் பறத்தல் செயலாக்கம் மற்றும் ஹைபர் எக்ஸ் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த முதலீடு மைல்கல்லாக அமைகிறது. நாங்கள் அடுத்த தலைமுறை, நச்சில்லாத புரபல்யூஷனை உருவாக்கி வருகிறோம்,” என இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. கோகுல் கூறியுள்ளார்.
வழக்கமான புரபல்யூஷன் அமைப்புகள் அமைப்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்ட ஹைட்ராசைனை பயன்படுத்துவதோடு அவற்றை கையாள்வதும் கடினமானதாக இருக்கிறது. மாற்றுத்தீர்வுகள் இருந்தாலும் அவற்றின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையில் சமரசம் நிலவுகிறது.
சர்வதேச அளவில் விண்வெளி திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், புரபல்யூஷன் அமைப்புகள் முக்கியமாகின்றன. செயல்திறன் வாய்ந்த விண்வெளி போக்குவரத்து அவசியமாகிறது. இதனால் உருவாகும் வாய்ப்பை நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது.
Edited by Induja Raghunathan