+

Kuku ஆப்’பில் தோனி முதலீடு – பிராண்ட் தூதராகவும் இணைந்தார்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி, AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கதை சொல்லல் தளமான Kuku-இல் முதலீடு செய்துள்ளார். மேலும்அவர் Kuku TV செயலியின் பிராண்ட் தூதராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டாண்மை மூலம், இந்தியாவிலும் உலகளாவ

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி, AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கதை சொல்லல் தளமான Kuku-இல் முதலீடு செய்துள்ளார். மேலும் அவர், Kuku TV-யின் பிராண்ட் தூதராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த கூட்டாண்மை மூலம், இந்தியாவிலும் உலகளாவிய சந்தைகளிலும் மைக்ரோடிராமா (microdrama) உள்ளடக்கத்தை விரிவாக்கும் திட்டத்தில் Kuku நிறுவனம் கவனம் செலுத்துகிறது. Kuku நிறுவனம் Kuku FM போன்ற ஆடியோபுக் செயலியையும், கல்வி மற்றும் பொழுதுபோக்கை இணைக்கும் Guru போன்ற செயலிகளையும் இயக்குகிறது.

”இந்த தளத்தின் தனித்துவமான பொழுதுபோக்கு அனுபவம் தான் என்னை கவர்ந்தது. மேலும், சிறிய நகரங்களில் இருந்து வந்த நிறுவனர் குழுவின் முயற்சியுடன் என்னுடைய வாழ்க்கை பயணம் ஒத்துப்போகிறது,” என்று தோனி கூறியுள்ளார்.
dhoni-kuku

2018-ஆம் ஆண்டு IIT-யின் முன்னாள் மாணவர்கள் லால் சந்த் பிஸு, விநோத் குமார் மீனா மற்றும் விகாஸ் கோயல் ஆகியோரால் Kuku நிறுவப்பட்டது. அதன் தொடக்கம் முதல், பல்வேறு செயலிகளின் மூலம் 350 மில்லியன் பதிவிறக்கங்களை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 20,000-க்கும் மேற்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட பெரிய நூலகத்தையும் இது வைத்துள்ளது.

Kuku TV தற்போது 7 மொழிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை வழங்கி, 180 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்துள்ளது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதை சொல்லும் திறனை மேம்படுத்துவதிலும் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Kuku நிறுவனத்தின் CEO லால் சந்த் பிஸு கூறுகையில்,

"மற்றவர்கள் தயங்கும் முடிவுகளை தைரியமாக எடுக்கும் தன்மை கொண்டவர் தோனி. அதேபோல நாங்களும் புதிய முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறோம்," என்றார்.

COO விநோத் குமார் மீனா,

"இந்தியா முழுவதும் மக்களுடன் இணையும் திறன் கொண்டவர் தோனி. அதனால் அவர் எங்கள் பிராண்டிற்கு இயல்பான தேர்வாக இருக்கிறார்," என்றார்.

CTO விகாஸ் கோயல், "மக்களைப் புரிந்து கொள்வதில் தோனிக்கு தனித்துவமான திறன் உள்ளது. AI அடிப்படையிலான கதை சொல்லல் தளத்தை உருவாக்கும் எங்களுக்கு இது மிக முக்கியமான ஆதாரமாக இருக்கும்," என்றார்.

இந்த முயற்சிக்கு Krafton மற்றும் Vertex Ventures போன்ற சர்வதேச முதலீட்டு நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருகின்றன.

facebook twitter