வங்கி உள்கட்டமைப்பு மற்றும் நிதி தளமான சென்னையைச் சேர்ந்த M2P Fintech தனது குழும தலைமை நிதி அதிகாரி (Group CFO) ஆக ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீசஸ் நிறுவன முன்னாள் நிர்வாகி விவேக் சேஷாத்ரியை நியமித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட விவேக் சேஷாத்ரி, நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகள், முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் இணைத்தல்-கையகப்படுத்தல் (M&A) முயற்சிகளை வழிநடத்த உள்ளார். அவர் உலகளாவிய நிதி செயல்பாடுகளை முன்னெடுத்து, நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்.
இதற்கு முன்பு, ஹிடாச்சி பேமென்ட் சர்வீசஸில் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிய அவர், நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, செயல்பாட்டு லாபம் மற்றும் மூலதன திறனை மேம்படுத்த உதவினார். முதலீட்டு வங்கி, மூலதன மேலாண்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் போன்ற துறைகளிலும் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
“M2P நிறுவனத்தின் வளர்ச்சி பயணத்தில் முக்கியமான தருணத்தில் விவேக் சேஷாத்ரியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலகளாவிய வங்கி உள்கட்டமைப்பு தளமாக விரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில், கட்டுப்பாடான வளர்ச்சி, சிக்கலான நிதி நடவடிக்கைகள் மேலாண்மை மற்றும் முதலீட்டாளர்களுடன் உறவு பேணுதல் ஆகியவற்றில் அவரது அனுபவம் எங்களுக்கு பெரிதும் உதவும். அவரின் தலைமைத்துவம், எங்கள் நிதி அடித்தளத்தை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் பொது சந்தையில் நுழையும் நோக்கத்திற்கும் உதவும்,” என்று M2P ஃபின்டெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மதுசூதனன் தெரிவித்தார்.
“M2P இந்தியாவில் உருவாகியுள்ள மிகச் சிறந்த நிதி உள்கட்டமைப்பு தளங்களில் ஒன்றாகும். நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வடிவமைப்பதிலும், உலகளாவிய விரிவாக்கத்திற்கான வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குவதிலும் பங்கு பெறுவது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நிறுவனத்தின் தலைமை குழுவுடன் இணைந்து செயல்திறனை மேம்படுத்தி, மதிப்பை அதிகரித்து, எதிர்கால வாய்ப்புகளுக்கு M2Pயை தயார் செய்ய ஆவலாக உள்ளேன்,” என்று விவேக் சேஷாத்ரி கூறினார்.
2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட M2P ஃபின்டெக், API அடிப்படையிலான தளத்தின் மூலம் வங்கிகள், ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதி தயாரிப்புகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் உதவி செய்து வருகிறது.