+

‘மிஸ்டு கால்’ யோசனையை 1 பில்லியன் Ai start-up ஆக மாற்றிய அபூர்வா ஸ்ரீவஸ்தவா - சுவாரஸ்ய கதை!

அமெரிக்காவின் சிலிகான் வாலியில் கோடிக்கணக்கான முதலீடுகள் சாட்பாட்கள் மற்றும் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்களில் செலவிடப்படும் சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபூர்வா ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது கூட்டாளி டைசன் சென் முற்றிலும் வேறுபட்ட துறையைத் தேர்ந்தெடுத்தனர் — HVAC (வீட்டு குளிரூட்டும் மற்றும் பர

அமெரிக்காவின் சிலிகான் வாலியில் கோடிக்கணக்கான முதலீடுகள் சாட்பாட்கள் மற்றும் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்களில் செலவிடப்படும் சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபூர்வா ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது கூட்டாளி டைசன் சென் முற்றிலும் வேறுபட்ட துறையைத் தேர்ந்தெடுத்தனர் — HVAC (வீட்டு குளிரூட்டும் மற்றும் பராமரிப்பு சேவைகள்) தொழில்தான் அது.

அவர்கள் தொடங்கிய Avoca என்ற நிறுவனம் சமீபத்தில் $125 மில்லியன் நிதி திரட்டியதன் மூலம் $1 பில்லியன் மதிப்பீட்டை எட்டியுள்ளது. இந்த முதலீட்டுக்கு Meritech Capital மற்றும் General Catalyst முன்னிலை வகித்தன; Kleiner Perkins உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றன.

“மிஸ்ட் கால்” என்பது ஒரு பெரிய இழப்பு

ஸ்ரீவஸ்தவா தனது சிறுவயதில் மிச்சிகன் மாநிலத்தில் குடும்ப தொழிலுக்கு உதவியபோது ஒரு முக்கிய உண்மையை கவனித்தார்.

ஒரு மிஸ்ட் கால் என்பது ஒரு வர்த்தக வாய்ப்பை இழப்பது. உணவகங்களில் ஒரு மிஸ்ட் கால் சுமார் $40 இழப்பாக இருக்கலாம். ஆனால், HVAC போன்ற சேவைத் துறைகளில் அது $40,000 வரை மதிப்புள்ள ஒப்பந்தத்தை இழக்கச் செய்யும் என்பதைக் கண்டார்.

அமெரிக்கா Massachusetts Institute of Technology-இல் பட்டம் பெற்ற ஸ்ரீவஸ்தவா முதலில் உணவகங்களுக்கான AI அழைப்பு பதில் அமைப்புகளை உருவாக்க முயன்றார். பின்னர், சென் என்பவருடன் சேர்ந்து, அதிக வருமானம் தரும் ஹோம் சர்வீசஸ் துறையில் கவனம் செலுத்தினர். பல AI நிறுவனங்கள் அலுவலகப் பணிகளை தானியக்கமாக்க முயற்சிக்கும் நிலையில், Avoca நேரடியாக தொழிலாளர்களை (plumbers, electricians, HVAC technicians) உதவுகிறது.

Avoca founder

அவர்களின் AI மனித குரல் போல பேசும்; சில விநாடிகளில் தொலைபேசி/செல்பேசி அழைப்புகளை எடுக்கும். நேரடி அட்டவணையை சரிபார்த்து அபாயிண்ட்மென்ட் பதிவு செய்யும் பழைய மதிப்பீடுகளை நினைவூட்டும் என்று அதிசயத்தை நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடாகும் அது.

Avoca தற்போது: 800+ வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறது 1-800-GOT-JUNK மற்றும் Goettl Air Conditioning போன்ற பெரிய நிறுவனங்களுடன் பணியாற்றுகிறது

2025-இல் எட்டு இலக்க வருமானத்தை கடந்தது. இந்த ஆண்டில் வாடிக்கையாளர்களுக்காக $1 பில்லியன் மதிப்புள்ள வேலை ஒப்பந்தங்களை உருவாக்கும் நிலையில் உள்ளது

“Vertical AI” – எதிர்காலம்

பொதுவான AI-ஐ விட, குறிப்பிட்ட துறைகளுக்கான “Vertical AI” தான் அடுத்த பெரிய வாய்ப்பு என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். ஸ்ரீவஸ்தவ்வா மற்றும் சென் ஆகியோர் நிரூபித்தது என்னவென்றால் ஒரு சாதாரண “மிஸ்ட் கால்” கூட சரியாக அணுகினால், அது பில்லியன் டாலர் வாய்ப்பாக மாறலாம் என்பதே.

பெரிய யோசனைகள் எப்போதும் பெரிய பிரச்சினைகளிலிருந்து மட்டுமல்ல — சில சமயம், நாம் கவனிக்காமல் விடும் சிறிய பிரச்சினைகளிலிருந்தும் வருகிறது.

facebook twitter