+

ரூ.6.7 கோடி நிதி திரட்டிய சென்னை ஸ்டார்ட்-அப் Meine Electric!

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் முதல் இரும்பு - காற்று நீண்டகால ஆற்றல் சேமிப்பு (LDES) தொழில்நுட்பத்தை முன்னெடுத்து வரும் நிறுவனம்தான் சென்னையை சேர்ந்த ‘Meine Electric’.

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் முதல் இரும்பு - காற்று நீண்டகால ஆற்றல் சேமிப்பு (LDES) தொழில்நுட்பத்தை முன்னெடுத்துவரும் சென்னையை சேர்ந்த ‘மைனே எலக்ட்ரிக்’ நிறுவனம் 7,50,000 டாலர்கள் (சுமார் ரூ.6.7 கோடி) முன்-விதை (Pre-seed) முதலீட்டை திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த முதலீடு ஆண்ட்லர் (Antler), ரிபாலன்ஸ் (Rebalance), வென்ச்சர் கேட்டலிஸ்ட்ஸ், கிரேட்கேப்பிடல் (Venture Catalysts, gradCapital), அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஏஐசி-ஏயூ இன்குபேஷன் பவுண்டேஷன் (AIC-AU Incubation Foundation) ஆகிய முன்னணி முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களான அலெக்ஸாண்டர் ஹோகவீன் ரட்டர் இடமிருந்தும் பெறப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பகட்ட முதலீடு, நிறுவனத்தின் ஆய்வக அளவிலான முன்மாதிரிகளில் இருந்து, சோதனைக்குத் தயாரான இரும்பு - காற்று பேட்டரி அமைப்புகளுக்கு மாறும் செயல்முறையை விரைவுபடுத்த உதவும் என நிறுவனம் இது தொடர்பான செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு சென்னையில், பிரியன்ஷ் மோஹன் (மெட்டல்-ஏர் தொழில்நுட்ப நிபுணர், அண்ணா பல்கலைக்கழக பட்டதாரி) மற்றும் ஸ்துதி கக்கர் (முன்னாள் பிசிஜி ஆலோசகர், பொருளாதார நிபுணர்) ஆகியோரால் நிறுவப்பட்ட ‘மைனே எலக்ட்ரிக்’ தனது தனியுரிம இரும்பு - காற்று பேட்டரி தொழில்நுட்பத்தை, ஒரு கிலோவாட் - மணி நேர சேமிப்பிற்கு 0.05 டாலருக்கும் குறைவான (சுமார் 4/kWh) சமப்படுத்தப்பட்ட செலவில் செயல்படக் கூடிய ஒரு நீண்ட கால பேட்டரியாக வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.

லித்தியம் - அயான் பேட்டரிகள் பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக மாறும் முன் சில மணி நேரங்களுக்கு மட்டுமே மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மைனே எலக்ட்ரிக்கின் இரும்பு - காற்று பேட்டரி தொழில்நுட்பம் 16 - 24 மணிநேர பேட்டரி தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 8 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடியது. இது பொதுவான சூரிய ஆற்றல் உபரி நேரத்துடன் பொருந்துவதால், தற்போதைய மற்றும் எதிர்காலஆற்றல் கட்டமைப்புகளுக்கு நாள் முழுவதும் (RTC) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்யும் ஒரு முக்கியமான ஆற்றல் உள்கட்டமைப்பாக அமைகிறது.

ஆசிய - பசிபிக் பகுதியில் இரும்பு - காற்று தொழில்நுட்ப அடுக்கைக் கொண்ட ஒரே நிறுவனமாக மைனே எலக்ட்ரிக் திகழ்கிறது. இதுவரை 4 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 7 சர்வதேச காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல காப்புரிமைகள் செயல்பாட்டில் உள்ளன. அதன் ரசாயன செயல்திறன் உலகளாவிய அளவுகோல்களுடன் ஒப்பிட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“சுத்தமான மின்சாரம் இடைவிடாது கிடைப்பதற்குப் பதிலாக தேவைக்கேற்ப வழங்க கூடியதாக மாறும்போதே, இந்தியா ஆற்றல் மாற்றத்தில் வெற்றி பெறும். கடந்த மூன்று ஆண்டுகளாக இரும்பு - காற்று வேதியியலை நிலையானதாகவும் மீண்டும் செய்யக் கூடியதாகவும் மாற்றுவதே எங்கள் கவனமாக இருந்தது. இப்போது, மின்வலையமைப்பு மற்றும் தொழில் மற்றும் வணிக (C&I) மின்சார தேவைகளுக்காக இதை நடைமுறையில் நிரூபித்து வருகிறோம்” என்று மைனே எலக்ட்ரிக் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரியன்ஷ்மோஹன் தெரிவித்தார்.

“மைனே எலக்ட்ரிக் எங்களை மிகவும் ஈர்த்தது. அவர்கள் மேற்கொண்ட ஆழமான எலெக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சியும் அதனுடன் இணைந்த அமைப்பு மட்ட செயல்படுத்தலும் ஆகும். மைனே எலக்ட்ரிக், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மையமாகக் கொண்ட மின்சார அமைப்புகளுக்கான உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தளமாக உருவாகும் திறன் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம்” என ஆண்ட்லர் அஸோஸியேட் பார்ட்னர் கௌரி சங்கர் நாகராஜன் தெரிவித்தார்.

உலக அமைப்பு எவ்வளவு விரைவாக மாறிக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். எதிர்காலத்தில் எந்தப் பொருளாதாரத்திற்கும் ஆற்றலே மிகவும் சக்திவாய்ந்த சொத்தாக மாறும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறைந்த மின் கட்டமைப்புகளின் முக்கியமான திறனூட்டும் காரணிகளாக மாறும். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது உற்சாகமாக உள்ளது” என்று ரிபாலன்ஸின் இணை நிறுவனர்கள் ஐஸ்வர்யா மால்ஹி மற்றும் விகாஸ் குமார் கூறியுள்ளனர்.

மைனே எலக்ட்ரிக் சென்னையில் 5,000 சதுர அடி வசதியுடன் செயல்படுகிறது. இது பைலட் உற்பத்திக்காக செயல்பாட்டு ரீதியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆய்வக முன்மாதிரிகளில் இருந்து சோதனைக்குத் தயாரான அமைப்புகளுக்கு மாறுவதற்கு வழிவகுக்கிறது. நிறுவன குழு 75 வருடங்களுக்கும் மேலான ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொண்டுள்ளது.

இந்த சுற்றில் பெறப்பட்ட நிதி, மைனே எலக்ட்ரிக்கின் தொழில்நுட்ப அளவிடுதல் மற்றும் வணிகமயமாக்கல் வழிமுறை திட்டத்தை விரைவுபடுத்த பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலதனத்தின் ஒரு பகுதி, குழு மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகச் சுயாதீன மின் உற்பத்தியாளர்கள் (IPPs) மற்றும் அதிக ஆற்றல் பயன்படுத்தும் வணிக மற்றும் தொழில் துறை வாடிக்கையாளர்களுடனான கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதற்கும் இயக்கப்படும் என்று நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


Edited by Induja Raghunathan

facebook twitter