LightFury Games என்ற AAA கேம்-டெக் நிறுவனம் வியாழக்கிழமை $11 மில்லியன் (சுமார் ₹90 கோடி) மதிப்பிலான pre-Series A நிதி திரட்டியுள்ளது. இந்த முதலீட்டில் எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், ஷ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, திலக் வர்மா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரும் முதலீட்டாளர்களாக இணைந்துள்ளனர்.
இந்த சுற்றில் Blume Ventures, V3 Ventures, MIXI மற்றும் Times Internet உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.
இதுகுறித்து நிறுவனம் தெரிவித்ததாவது,
இந்த புதிய நிதி கேம் அபிவிருத்தியை முடிக்கவும், வெளியீட்டுக்குப் பிறகு தேவையான live operations திறன்களை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். இதில் அறிமுகத்திற்குப் பிந்தைய உள்கட்டமைப்பு, உள்ளடக்கங்கள், systems மற்றும் player experience ஆகிய மேம்பாடுகள் அடங்கும்.
2024-ல் கரன் ஷ்ராஃப், அனுராக் பானர்ஜி, மற்றும் தினா பாலச்சந்திரன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், “eCricket” என்ற AAA தரத்திலான மொபைல் கேமை உருவாக்கி வருகிறது. இந்த கேம் இந்த ஆண்டில் வெளியிடப்பட உள்ளது.
புளூம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாகக் கூட்டாளி கார்த்திக் ரெட்டி, கூறியதாவது,
“LightFury நிறுவனத்தை அதன் தொடக்கத்திலிருந்தே ஆதரித்து வருகிறோம். உலகளாவிய நோக்குடன் இந்திய கேமிங் ஸ்டுடியோக்களின் புதிய தலைமுறையை உருவாக்கும் அவர்களின் முயற்சியை நாங்கள் நம்புகிறோம். AAA கேம் உருவாக்குவது எளிதானதல்ல; அதற்கு தொடர்ச்சியான படைப்பாற்றல், ஆழமான தொழில்நுட்ப திறன் மற்றும் நீண்டகால ஒழுக்கம் தேவை. உலகின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள திறமையான குழு ஒன்றாக இணைந்து, தீவிரமாகவும் படைப்பாற்றலுடனும் செயல்படுவதைக் கண்டுள்ளோம். AI கருவிகளின் ஆதரவுடன், eCricket-ஐ உலகம் விரைவில் அனுபவிக்கும் என நாங்கள் உற்சாகமாக உள்ளோம். இது இந்திய கேமிங் வரலாற்றில் ஒரு ‘துரந்தர்’ ஆக மாற வேண்டும் என்று விரும்புகிறோம்.”
“eCricket” கேம் Unreal Engine-5 மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மொபைலுக்கு முன்னுரிமை (mobile-first) அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், physics-based gameplay, strategic batting மற்றும் bowling systems ஆகியவற்றை இணைத்து, நிஜ உலக கிரிக்கெட் பாணி மற்றும் போட்டி இயக்கங்களை பிரதிபலிக்கிறது.
மேலும், இந்த கேமுக்காக உலகளாவிய அளவில் 600-க்கும் மேற்பட்ட தொழில்முறை கிரிக்கெட் வீரர்களின் roster உரிமத்தை நிறுவனம் பெற்றுள்ளது. இதில் கிறிஸ் கெய்ல், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பாட் கமின்ஸ் உள்ளிட்டோர் அடங்குவர்.