+

தியேட்டர் அனுமதி இல்லை; இ-பாஸ் கட்டாயம்: தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?!

தமிழகத்தில் ஏப்.26ஆம் தேதி முதல் தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இதோ:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் சமீபத்தில் விதிக்கப்பட்டன. இரவுநேர லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின்பும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. இதையடுத்து உயிரிழப்புகளை தடுக்க தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக இன்று தகவல் வெளியாகி இருந்தது.


முன்னதாக தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,000 ஆயிரத்தை நெருங்கியது. இதில் 200க்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் என்பது கூடுதல் அச்சத்தை கொடுத்தது. அதேபோல் உயிரிழப்பு 78 ஆக அதிகரித்தது.

lockdown

இந்த கடுமையான சூழ்நிலையில் இன்று தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த்தினார். ஆலோசனையின் முடிவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி தமிழகத்தில் ஏப்.26ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 வரை தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இதோ:


* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் (மால்கள்) இயங்க அனுமதி இல்லை.


* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்.


* சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை .


* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை.


* சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளை முதல் 100 சிறப்பு பேருந்துகள்


* அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.


* விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.


* அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.


* திருவிழாக்கள், குடமுழக்கு ஆகிய பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் இனி கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி.


* திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி.


* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அடை சார்ந்த சடங்குகளுக்கு 25 பேர் மட்டுமே அனுமதி.


* ஐடி நிறுவங்னக்ளில் 50% ஊழியர்கள் கொண்டு இயங்க மட்டுமே அனுமதி, மற்றவர்கள் வீட்டிலிருந்து பணி புரியவேண்டும்.


* கோல்ஃப், டென்னிஸ் க்ளப், உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கங்கள் இயங்க அனுமதி இல்லை. சர்வதேச, தேசிய அளவு விளையாட்டு போட்டிகள் மட்டும் அனுமதி.


* தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம்.


* வாடகை டாக்சி, ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதி.


தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து பழைய கட்டுப்பாடுகளும் பொருந்தும்.

facebook twitter