சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 அதிகரித்து 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.65 அதிகரித்து 7,745 ரூபாயாகவும் உள்ளது.
சனிக்கிழமை இன்று (21-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்கத்தின் விலைகள் ஏற்றம் கண்டுள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்: சனிக்கிழமை (21.12.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 அதிகரித்து 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.65 உயர்ந்து 7,745 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.600 உயர்ந்து ரூ.71,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.650 உயர்ந்து ரூ.77,450 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.520 அதிகரித்து ரூ.61,960 என்றும் விற்பனையாகின்றன. வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றமில்லை. சனிக்கிழமையான இன்று (21-12-24) 1 கிராம் விலை 1 ரூபாய் மட்டுமே அதிகரித்து ரூ.99 என்றும் ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் அதிகரித்து ரூ.99,000 என்றும் உள்ளன.
காரணம்: 2024 இரண்டாவது காலாண்டில் தங்கத்திற்கான தேவை 6 சதவிகிதம் குறைந்து 929 டன்களாக குறைந்துள்ளதால், தங்கத்தின் விலை குறைந்து வருவதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. எனினும், வார இறுதி என்பதால் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றே ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,100 (மாற்றம் ரூ.60 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,800 (மாற்றம் ரூ.480 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,745 (மாற்றம் ரூ.65 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,960 (மாற்றம் ரூ.520 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,100 (மாற்றம் ரூ.60 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்- ரூ.56,800 (மாற்றம் ரூ.480 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் – ரூ.7,745 (மாற்றம் ரூ.65 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,960 (மாற்றம் ரூ.520 உயர்வு)