+

Stock News: சரிவில் இருந்து மீண்டு முதலீட்டாளர்களுக்கு நிம்மதி தந்த பங்குச்சந்தை!

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை தொடக்க நேர வர்த்தகத்தில், 523.51 புள்ளிகள் உயர்ந்து 78,565.10 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 167.85 புள்ளிகள் உயர்ந்து 23,755.35 புள்ளிகளாகவும் இருந்தது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை தொடக்க நேர வர்த்தகத்தில், 523.51 புள்ளிகள் உயர்ந்து 78,565.10 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 167.85 புள்ளிகள் உயர்ந்து 23,755.35 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (23-12-2024) ஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் 5 நாட்கள் தொடர் சரிவை சந்தித்தது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தகம் தொடங்கிய போது ஏற்றத்துடன் இருந்தது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.

இன்று காலை தொடக்க நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 523.51 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி 167.85 புள்ளிகள் உயர்ந்தது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 9.30 மணி நிலவரப்படி, 605.21 புள்ளிகள் உயர்ந்து 78,646.80 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 182.05 புள்ளிகள் உயர்ந்து 23,769.55 புள்ளிகளாகவும் இருந்தன.

காரணம் : சர்வதேச சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை, இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாக இருப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளின் கவனம் இந்தியப் பங்குச்சந்தைகளில் பின்னடைவை கண்டுள்ளது. எனினும், கடந்த வாரத்தை காட்டிலும் பங்கு வர்த்தகம் மீட்சி கண்டுள்ளது. பங்குவர்த்தகத்தில் வாரத்தின் தொடக்க நாளான இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 23) பங்குகள் உயர்வுடன் தொடங்கின.

stock market

நிப்டி பேங்க் குறியீடு இன்று 399.90 புள்ளிகள் அதிகரிக்க நிப்டி ஐடி குறியீடு 172.40 புள்ளிகள் உயர, பிஎஸ்இ ஸ்மால் கேப் 421.05 புள்ளிகள் சரிந்துள்ளன. அனைத்துத் துறை பங்குகளுமே ஏற்றத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில் ஐடி, உலோகம் மற்றும் ரியாலிட்டி பங்குகள் அதிக லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்: டாடா ஸ்டீல், ஸ்ரீராம் பைனான்ஸ், எல் & டி, ட்ரென்ட், டாக்டர் ரெட்டி

இறக்கம் கண்ட பங்குகள்: எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எல்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஆட்டோ, அப்பல்லோ ஹாஸ்பிடல், எய்கர்மோட்

இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமையன்று பெரிய மாற்றமில்லாமல் தொடர்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.85. 03 ஆக உள்ளது.

facebook twitter