மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சித்துறையில் (DPIIT), தமிழ்நாடு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களை பதிவு செய்யப்பட்டிருக்கும் மாநிலம் என்ற மைல்கல்லை அடைந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
"நிதி அளிக்கும் திட்டங்கள், வழிகாட்டுதல் வாய்ப்புகள் மற்றும் அடைக்காக்கும் மையங்கள் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் ஸ்டார்ட் அப் சூழலை வளர்த்தெடுப்பதில் ஸ்டார்ட் அப் டிஎன் முக்கிய பங்காற்றியிருப்பதாக," இதன் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ சிவராஜா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மெட்ரோ மையம் மற்றும் 9 பிராந்திய மையங்களில் ஸ்டார்ட் அப் சூழல் தழைப்பதாகவும், இளம் தொழில்முனைவோருக்கான துடிப்பான உள்கட்டமைப்பு வசதிகளை இது வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"டிபிஐஐடி-யில் பதிவு செய்யப்பட்ட 10,000 ஸ்டார்ட் அப்'கள் எனும் முக்கிய மைல்கல்லை தமிழ்நாடு எட்டியுள்ளது. 2021 மார்ச்சில், 2,300 ஸ்டார்ட் அப் என இருந்த நிலையில், தற்போது அடைந்துள்ளது முக்கிய பாய்ச்சலாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஸ்டார்ட் அப் ஆதரவு மற்றும் புதுமையாக்கத்திற்கு ஊக்கம் அளிக்கப்படுவதில் கவனம் செலுத்தும் வகையில் ஸ்டார்ட் அப் டிஎன் புதுபிக்கப்பட்டது இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்," என்றும் இது தொடர்பான சமூக ஊடக பதிவில் சிவராஜா ராமநாதன் கூறியுள்ளார்.
இந்த அரசு அமைப்பு, இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவு ஆர்வத்தை ஊக்குவித்து வருவது புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மாநில அரசின் வலுவான ஆதரவுடன் தமிழ்நாடு முன்னணி ஸ்டார்ட் அப் மையமாகும் உருவாகும், என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்தி -பிடிஐ
Edited by Induja Raghunathan