EV முதல் AR வரை - 2025-ன் டாப் 10 ட்ரெண்டிங் பிசினஸ் ஐடியா!

12:43 PM Dec 30, 2024 | Jai s

உலகமே 2025-ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில் முனைவோர்கள் பழைய முறைகளை கைவிட்டு புதுமையான நுட்பங்களை கையில் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

குறைந்த முதலீட்டு முயற்சிகள் முதல் உயர் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரை, வளர்ந்து வரும் துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை இங்கே அலசலாம்.

குறைந்த முதலீடு, குறைந்த தொழில்நுட்பம்

1. EV சார்ஜிங் மையங்கள்

மின்சார வாகனங்களின் பயன்பாடு எழுச்சி கண்டு வரும் இந்தச் சூழலில், சிறிய அளவிலான சார்ஜிங் நிலையங்கள் கவனம் பெறுகின்றன. இந்த மையங்கள் குடியிருப்பு பகுதிகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. வீடுகளில் சார்ஜ் செய்யும் வசதி இல்லாத மின்சார வாகன உரிமையாளர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது.

இது ஏன் டிரெண்டிங்?

  • குறைந்த செலவில் அரசாங்க மானியத்துடன் இதனை அமைக்கலாம்.

  • நகர்ப்புறங்களில் வளர்ந்து வரும் மின்சார வாகன பயன்பாட்டின் மூலம் இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

  • சந்தா அடிப்படையிலான வருவாய் மாதிரிகளுக்கான சாத்தியக் கூறுகள் இதில் ஏராளம் உண்டு.

2) ‘பண்ணையிலிருந்து மேஜைக்கு’

தற்போது உணவு ஆதாரங்களில் நுகர்வோர் வெளிப்படைத்தன்மையைக் கோருவதால், பண்ணையிலிருந்து விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே கொண்டு வரும் ‘Farm-to-table meal kits’ பெரிதும் கைகொடுக்கின்றன.

உள்ளூர் விவசாயிகளை தொடர்பு கொள்வதன் மூலம், தொழில்முனைவோர் புதிய மற்றும் நீடித்திருக்கும் பருவகால உணவுப் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யலாம்.

இது ஏன் டிரெண்டிங்?

  • சமீபகாலமான ஆர்கானிக் மற்றும் ஆரோக்கிய உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால் இது நல்ல பலனளிக்கக் கூடும்.

  • இதற்குக் குறைந்த தொழில்நுட்பமே தேவைப்படும் என்றாலும் இதன் தாக்கம் கூடுதலாக இருக்கும்

  • சந்தா அடிப்படையிலான வருவாய் மூலம் தொடர்ந்து நிலையான வருமானம் வருவதை இது உறுதி செய்யும்.

3. மொபைல் செல்லப் பிராணிகள் உதவி மையம்

செல்லப் பிராணிகள் வளர்க்கும் ட்ரெண்ட் உலகம் முழுவதும் எல்லா காலத்திலும் இருக்கும் ஒன்று. செல்லப் பிராணிகளுக்கான பராமரிப்பு சேவை என்பதுதான் அதன் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால். இதற்காக பல கி.மீ தூரம் பயணிக்க வேண்டிய சிரமங்களை இந்த மொபைல் உதவி மையம் நீக்குகிறது.

இது ஏன் டிரெண்டிங்?

  • ஒரு சலூன் கடை திறப்பதை காட்டிலும் இதற்கு குறைந்த முதலீடே தேவைப்படும்.

  • நகர்ப் புறங்களில் இதற்கான டிமாண்ட் அதிகம்.

  • செல்லப் பிராணிகளுக்கான பயிற்சி போன்ற கூடுதல் சேவைக்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.

மிதமான முதலீடு, மிதமான தொழில்நுட்பம்

4. மெய்நிகர் உடற்பயிற்சி நிலையங்கள்

ஆன்லைன் உடற்பயிற்சிகள் டிரெண்டாகி வரும் இந்த காலகட்டத்தில் இந்த மெய்நிகர் உடற்பயிற்சி நிலையங்கள் யோகா, கார்டியாக் பயிற்சி, நடனம் போன்றவற்றுக்கான வகுப்புகளை உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பொதுவான பயிற்சிகள் அல்லது தனிப்பட்ட பயிற்சிகள் என தொழிமுனைவோர் தேர்வு செய்து கொள்ளலாம்.

இது ஏன் டிரெண்டிங்?

  • ஜிம்களை விட குறைந்த முதலீடு.

  • சந்தா முறை மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் என வருவாய் கிடைக்கும்.

  • ஏஐ உதவியும் பயனரின் அனுபவத்தை மேம்படுத்தலாம்.

5) நகர்ப்புற வெர்டிகல் விவசாயம்

நகரங்களில் இருக்கும் பெரும் பிரச்சினையே இடப்பற்றாகுறைதான். இதன் அடிப்படையில், செங்குத்தாக அமைக்கப்பட்ட அடுக்குகளில் பயிர்களை சாகுபடி செய்வதே வெர்டிகல் விவசாயம். உலக அளவில் வளர்ந்து வரும் இந்த டிரெண்ட் நகர்ப்புற உணவு தேவைக்கான தீர்வை வழங்குகிறது.

இது ஏன் டிரெண்டிங்?

உணவு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. குறைந்த இடத்தில் அதிக மகசூல் தருகிறது. பல நாடுகளில் மானியங்களும் ஊக்கத் தொகைகளும் கிடைக்கின்றன.

6) மைக்ரோ மென்போருள் சேவைகள்

பெரிய அளவிலான மென்பொருளை உருவாக்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட வணிகச் சிக்கல்களைத் தீர்க்கும் மைக்ரோ மென்போருட்களை (Micro SaaS) உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம்.

இது ஏன் டிரெண்டிங்?

சிறிய டீம்களால் கூட எளிதில் அணுக முடியும். சந்தாக்கள் மூலம் தொடர்ச்சியான வருவாய். குறிப்பிட்ட சந்தைகளில் கவனம் செலுத்தி குறைவான போட்டியை உறுதி செய்யமுடியும்.

அதிக முதலீடு, உயர் தொழில்நுட்பம்

7. பயோமெட்ரிக் ஆரோக்கிய சாதனங்கள்

கொரோனாவுக்கு பிறகு ஆரோக்கியம் தொடர்பான எண்ணம் மக்களிடையே அதிகரித்துள்ளது. உடலில் அணியக்கூடிய பயோமெட்ரிக் சாதனங்கள், ஃபிட்னஸ் டிராக்கிங்கை விட அதிகமான விஷயங்களை வழங்குவதற்காக உருவாகி வருகின்றன. நீர்ச்சத்து குறைபாடு, குளுக்கோஸ் அளவு, தூக்கத்தின் அளவு ஆகியவற்றை கணக்கிடும் பயோமெட்ரிக் சாதனங்கள் இதற்கு நல்ல தேர்வு.

இது ஏன் டிரெண்டிங்?

  • தனிப்பட்ட ஆரோக்கியத்தை கண்காணிப்பது அதிகரிக்கிறது.

  • சுகாதார நிபுணர்களின் ஆலோசனை இதற்கு மேலும் தாக்கத்தை அதிகரிக்கலாம்.

  • AI மற்றும் IoT போன்ற தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளுக்கான வலுவான சாத்தியங்கள் உண்டு.

8) ஏஐ விநியோகச் சங்கிலி தீர்வுகள்

விநியோகச் சங்கிலி சீர்குலைவு என்பது உலகளவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தேவையை கணிக்கக் கூடிய, தளவாடங்களை மேம்படுத்தக் கூடிய மற்றும் கழிவுகளை குறைக்கக் கூடிய AI தளங்களே இன்றைய வியாபாரங்களுக்கு மிகவும் அவசியமாக உள்ளன.

இது ஏன் டிரெண்டிங்?

  • நெகிழ்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

  • சில்லறை விற்பனை அல்லது மருந்துப் பொருட்கள் போன்ற முக்கிய தொழில்களுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பு.

  • இந்த டூல்களின் மூலம் தொழிலுக்கு முதலீட்டின் மீதான வருவாய்க்கான சாத்தியம் அதிகம்

9) கார்பன் பிடிப்பு ஸ்டார்-அப்கள்

காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் முக்கியப் பிரச்சினையாக மாறியிருக்கும் சூழலில், கார்பன் சமநிலை என்பது முன்னுரிமையாக உள்ளது. இதனால் ‘கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (CCS)’ தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது. தொழில்துறை அல்லது குடியிருப்பு பயன்பாடுகளுக்கான தீர்வுகளை தொழில்முனைவோர் ஆராயலாம்.

இது ஏன் டிரெண்டிங்?

  • காலநிலை மாற்றத்தை எதிர்த்து சண்டையிட இன்றியமையாதது.

  • அரசாங்க சலுகைகள் உண்டு.

  • பெருநிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு.

10) ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (AR) சில்லறை விற்பனை தீர்வுகள்

ஆக்மென்டட் ரியாலிட்டி என்பது மெய்நிகர் முயற்சியில் இருந்து தயாரிப்பு டெமோக்கள் வரை ஆன்லைன் ஷாப்பிங் அனுபவங்களை மறுவரையறை செய்கிறது. தொழில்முனைவோர் பிராண்டுகளுக்கான AR கருவிகளை உருவாக்கலாம்.

இது ஏன் டிரெண்டிங்?

  • வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.

  • இ-காமர்ஸ் மற்றும் சில்லறை விற்பனையில் AR பயன்பாடு அதிகரித்து வருகிறது.

  • வளர்ந்து வரும் 5G உள்கட்டமைப்புடன் இதற்கான தேவை மிக அதிகம்

EV சார்ஜிங் மையங்கள் போன்ற சிறிய அளவிலான முயற்சிகள் முதல் AR சில்லறை விற்பனை போன்ற மாற்றத்தக்க தொழில்நுட்ப தீர்வுகள் வரை, 2025 ஒவ்வொரு வகையான தொழில்முனைவோருக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. தகவமைப்பு, ஆக்கப்பூர்வ சிந்தனை ஆகியவற்றுடன் கூடிய கவனத்துடன் வாடிக்கையாளர்களை ஈர்த்து புதிய ஆண்டை உங்களுடையதாக்குங்கள்!

- மூலம்: சானியா அகமது கான்




Edited by Induja Raghunathan