Gold Rate Chennai: 2024 இறுதியில் மகிழ்ச்சி - தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!

11:35 AM Dec 31, 2024 | Jai s

2024-ம் ஆண்டின் கடைசி நாளில் நகை வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ஆபரணத் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.57,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.7,800 ஆகவும், சவரன் விலை ரூ.128 உயர்ந்து ரூ.62,400 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (31.12.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.7,110 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.56,880 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.7,756 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.62,048 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (31.12.2024) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1.90 குறைந்து ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,900 குறைந்து ரூ.98,000 ஆகவும் விற்பனையாகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே குறைந்திருப்பதால் ஆபரணத் தங்கத்தின் விலை கொஞ்சம் சரிந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,110 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56.880 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,756 (ரூ.44 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,048 (ரூ.352 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,110 (ரூ.40 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56.880 (ரூ.320 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,756 (ரூ.44 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,048 (ரூ.352 குறைவு)


Edited by Induja Raghunathan