தொழில், வேலையில் தேக்கமா? - நீங்கள் கவனிக்க வேண்டிய 7 ரெட் அலர்ட்!

06:00 PM Jan 02, 2025 | Jai s

அயராமல் உழைத்தாலும் தொழிலில் அல்லது நீங்கள் பார்க்கும் வேலையில் தேக்கம் அடைந்தது போல் உணர்கிறீர்களா?

அப்படியென்றால், நீங்கள் தனியாக இல்லை. உங்களை போல பலரும் தங்கள் தொழிலிலோ அல்லது வேலையிலோ முன்னேற்றம் இல்லாமல் தேங்கி நிற்கும் காலகட்டங்களை சந்தித்துள்ளனர். பதவி உயர்வுகளோ, போதிய வாய்ப்புகளோ கிடைக்காமல் உள்ளனர்.

தேக்கநிலை சிக்கல் என்பது நுட்பமான, கவனிக்கப்படாத சிவப்புக் கொடி (Red Flags) ஆக உள்ளது. (பிசினஸில் சிவப்புக் கொடிகள் என்பது ஒரு வணிகம் சிக்கலில் உள்ளது அல்லது வணிகம் திறமையற்ற தலைமையைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும்). சிவப்புக் கொடி, உங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நடத்தைகள், பழக்கங்கள் அல்லது சூழ்நிலைகள் போன்றவையாக இருக்கலாம்.

இக்கட்டுரையில், உங்களின் வேலை, தொழில் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சிவப்புக் கொடிகளை காண்போம். இவற்றை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதன் மூலம், உங்களின் தொழிலை மறுசீரமைக்கவும், அதன் வேகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

1. முன்னுரிமை இல்லாமல் மிகைப்படுத்துதல்

முன்னுரிமையே இல்லாமல் எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்வது உங்களுக்கு உதவுவது போல் தோன்றலாம். ஆனால், அவை பெரும்பாலும் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வுக்கே வழிவகுக்கும். அது உங்கள் வேலையின் தரத்தைக் குறைக்கும். எனவே, உங்கள் வேலைக்கு அவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் பொறுப்புகளுக்கு ஒத்துப்போகாத பணிகளை நிராகரியுங்கள் அல்லது அந்த பணிகளை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவும்.

எது அவசரமானது மற்றும் முக்கியமானது என்பதைத் தீர்மானிக்க முடிந்தால் அதற்கான சாஃப்ட்வேர் போன்ற கருவிகளை (Tool) பயன்படுத்துங்கள்.

2. கருத்து அல்லது விமர்சனத்தை தவிர்த்தல்

விமர்சனம் மீதான பயம் உங்களின் கற்றலை தடுக்கலாம். ஆக்கபூர்வமான விமர்சனமே முன்னேற்றத்துக்கான கருவி. அதைத் தவிர்ப்பது உங்கள் திறமையில் இடைவெளியை ஏற்படுத்தும். எனவே, விமர்சனங்களை வளர்வதற்கான வாய்ப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆக, சக ஊழியர்கள் போன்றோர்களிடம் இருந்து கருத்துகளையோ, விமர்சங்களையோ பெற்று தொழிலை மேம்படுத்தவும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்.

3. வசதியான சூழலில் தேங்குதல்

வழக்கமான நடைமுறைகள் உங்களை பாதுகாப்பாக உணரவைக்கலாம். ஆனால், அவை தேக்க நிலைக்கு வழிவகுக்கலாம்.

கம்ஃபர்ட் ஜோன் எனப்படும் வசதியான சூழலில் இருந்து வெளியேறி புதுமை மற்றும் வளர்ச்சிக்கு முன்னேற புதியவைகளை முயற்சிக்க வேண்டும்.

உங்கள் எல்லைகளை தகர்த்தெறியும் சவால்களை எதிர்கொள்ளுங்கள். உங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்த உங்கள் வளர்ச்சியை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதிய ஸ்கில் (skill) கற்றுக்கொள்ளுங்கள்.

4. நெட்வொர்க்கிங் பழக்கம்

உங்கள் நெட்வொர்க், உங்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். உங்கள் நெட்வொர்க் தொழில்முறை உறவுகளை உருவாக்க அல்லது வளர்க்கத் தவறினால் புதியவற்றை முயற்சிக்கலாம். எனவே, தொழில் துறை நிகழ்வுகளில் அதிகமாக கலந்து கொள்ளுங்கள். லிங்க்ட்இன் போன்ற தளங்களில் சகாக்களுடன் இணைந்திருங்கள். உங்கள் நெட்வொர்க்கில் உள்ளவர்களிடம் பழக்கத்தில் இருந்து உறவுகளைப் பேணுங்கள்.

5. சாஃப்ட் ஸ்கில் மேம்பாட்டை புறக்கணித்தல்

தொழில்நுட்ப நிபுணத்துவம் உண்மையிலேயே இன்றியமையாதது. ஆனால், உணர்ச்சிகள், கம்யூனிகேஷன், டீம் வொர்க் ஆகியவை தலைமைப் பாத்திரத்துக்கும், தொழில் முன்னேற்றத்துக்கும் சம அளவில் முக்கியம்.

உங்களின் மென் திறன்களை (soft skills) மேம்படுத்த நேரத்தை செலவழியுங்கள்.

பேரப் பேச்சு, பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த உதவும் படிப்புகள், வொர்க் ஷாப் மற்றும் புத்தங்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

6. இன்ட்ஸ்ரி ட்ரெண்டை புறக்கணித்தல்

தொழில் துறை எப்போதும் வேகமாக வளரக்கூடியது. தொழில்துறை ட்ரெண்டை புறக்கணிப்பது, சந்தை தேவைகளுக்கு ஏற்ப திறமையை மேம்படுத்தத் தவறுவது உங்கள் நிபுணத்துவத்தை குறைக்கலாம்.

உங்கள் தொழில், வேலை தொடர்புடைய செய்திகளை அறிந்துகொள்வது, அதற்கேற்ற வெபினார்களில் கலந்துகொள்வது மூலம் ட்ரெண்டை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

எனவே, மாற்றத்தைத் தழுவுவது தொழில் துறையில் உங்களை ட்ரெண்ட்டுக்கு தகுந்த மாதிரியும், மதிப்புமிக்கதாகவும் வைத்திருக்கும்.

7. டாக்ஸிக் பணியிடம்

மோசமான கம்யூனிகேஷன், வெறுப்பு, அங்கீகாரமின்மை ஆகியவை அடங்கிய டாக்ஸிக் பணி சூழல் உங்கள் ஆற்றலையும், திறனையும் முடக்கலாம்.

டாக்ஸிக் பணிச் சூழலை மேம்படுத்தி, உங்கள் மன மற்றும் தொழில்முறை வாழ்வை முன்னேற்றுங்கள்.

முயற்சிகள் தோல்வியுற்றால், வேறு இடங்களில் சிறந்த வாய்ப்புகளை ஆராய தயங்க வேண்டாம்.

டேக் அவே...

இந்த ஏழு சிவப்புக் கொடிகளை ஆராய்வது தேக்கநிலையை அடைந்திருக்கும் உங்கள் தொழில்துறை வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான முதல் படி. விழிப்புணர்வோடு இருப்பதன் மூலம் சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்ள உதவும்.

உங்கள் இலக்குகளுக்கான பாதையை வழங்குகிறது. இன்று நீங்கள் இருக்கும் இடத்தை பற்றி யோசியுங்கள். மேலே சொன்ன சிவப்புக் கொடிகள் ஏதேனும் உங்கள் தொழில் வாழ்க்கையை முடக்குகிறதா என்பதை ஆராயுங்கள்.

இவற்றை நேருக்கு நேர் சமாளிப்பதன் மூலம் தேக்கநிலையிலிருந்து விடுபட்டு, வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவதற்கு நீங்கள் சிறப்பாக தயாராக முடியும்.

- மூலம்: சானியா அகமது கான்


Edited by Induja Raghunathan