சர்வதேச விரிவாக்கத்தை எதிர்நோக்கும் டாடா தலைமையிலான ஏர் இந்தியா!

01:12 PM Jan 02, 2025 | cyber simman

தனியார்மயமாக்கலுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறைய வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், வரும் ஆண்டுகளில் அதன் சர்வதேச சேவைகள் மேலும் அதிகரிக்கும் என நிறுவன தலைவர் கேம்பல் வில்சன் கூறியிருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு சென்று கொண்டிருக்கும் ஒற்றை மைய விமானங்களின் உள்ப்புற அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு மத்திய காலத்திற்குள் இது நிறைவேறும் என்றும் வில்சன் கூறியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த ஏர் இந்தியா, 2022 ஜனவரி மாதம் டாடா குழுமத்தால் வாங்கப்பட்டு, ஐந்தாண்டு சீரமைக்கு உள்ளாகி வருகிறது.

2024 ல் ஏர் இந்தியா மற்றும் விஸ்டரா இணைப்பு நிறைவேறியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐ.எக்ஸ் கனெக்ட் ஒருங்கிணைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், இந்த இணைப்பு மற்றும் புதிய விமானங்கள் ஏர் இந்தியா குழுமம் வசம் உள்ள விமானங்கள் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தியுள்ளது என்றும், இதன் மூலம் 100 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு விரிவாக்கம் சாத்தியாகியுள்ளது என்றும் ஏர் இந்தியா சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குனர் வில்சன் தெரிவித்துள்ளார்.

"வரும் ஆண்டுகளில் ஏர் இந்தியாவின் சர்வதேச சேவை மேலும் அதிகரிக்கும்,  அண்மையில் வாங்கப்பட்ட 100 விமானங்கள் மட்டும் அல்லாமல், ஏற்கனவே 2023 ல் மேற்கொள்ளப்பட்ட 470 விமானங்களும் இதற்கு முக்கிய காரணம்” என்று கூறியுள்ளார்.

புதிய விமானங்கள், புதிய 12 அமைப்பு பரமாரிப்பு வசதி, பெங்களூருவின் பயிற்சி அகாடமி, மகாராஷ்டிராவின் அமராவதியில் புதிய விமான பள்ளி மற்றும் அரியனாவில் பயிற்சி அகாடமையின் ஆதரவை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா வேகமான வளரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இருப்பதாகவும், சர்வதேச நகரங்களுக்கு இந்திய விமானங்கள் நேரடி சேவை வழங்கும் வகையில் இந்தியாவை முக்கிய விமான மையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் வில்சன் கூறியுள்ளார்.

தனியார்மயமாக்களுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறைய வளர்ந்திருக்கிறது, எனினும் இன்னமும் நிறைய செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

"நாம் விரும்பும் வகையில் உலகத்தரமான விமான சேவை நிறுவனமாக உருவாக 30,000 ஏர் இந்தியா ஊழியர்களும் முழுமனதுடன் உழைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி- பிடிஐ


Edited by Induja Raghunathan