புத்தாண்டு பிறந்ததில் இருந்தே அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வார இறுதியில் சற்றே குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக உள்ளது. சவரனுக்கு ரூ.360 குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.7,260 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.58,080 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.7,920 ஆகவும், சவரன் விலை ரூ.696 உயர்ந்து ரூ.63,360 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (4.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.45 குறைந்து ரூ.7,215 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.57.720 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 குறைந்து ரூ.7,871 ஆகவும், சவரன் விலை ரூ.392 குறைந்து ரூ.62,968 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (4.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.99 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.90,000 ஆகவும் உள்ளது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே குறைந்துள்ளது, ஆபரணத் தங்கத்தின் விலை குறைவுக்கு காரணமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,215 (ரூ.45 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57.720 (ரூ.360 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,871 (ரூ.49 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,968 (ரூ.392 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,215 (ரூ.45 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57.720 (ரூ.360 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,871 (ரூ.49 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,968 (ரூ.392 குறைவு)
Edited by Induja Raghunathan