
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ’4680 பாரத் செல்’ மேடையை ஸ்டார்ட் அப்கள் மற்றும் வர்த்தகங்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடுவதாக அறிவித்துள்ளது. அதன் பேட்டரி பேக், ஆட்டோமோட்டிவ், டிரோன்கள் மற்றும் கையடக்க மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பயன்படுத்தப்பட இது வழி செய்கிறது.
“எரிசக்தி அடித்தளமாக அமையும் வகையில் புதுமையாக்கத்திற்கு, அடுத்த கட்ட போக்குவரத்து தீர்விற்கும் முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் அல்லது வர்த்தகம் இனி எங்கள் அமைப்புகளை வாங்கிக் கொள்ளலாம்,” என இந்த அறிவிப்பு தொடர்பான நிகழ்வில் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தேவைக்கு ஏற்ற தனிப்பட்ட தீர்வுகளை உண்டாக்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.
“உருவாக்கத்தில் எந்த பிரச்சனையும் அதன் அம்சங்களில் இருந்து வேறுபட்டது என்றில்லை. அமைப்பை தான் நாம் மாற்ற வேண்டும். எலெக்ட்ரோட் கட்டமைப்பை பொருத்தவரை எல்லாமே இயல்பான கட்டமைப்பு தான்,” என அவர் கூறினார்.
ஓலா எலெக்ட்ரிக் தனது உற்பத்தியை மேம்படுத்தும் வழிகள் மற்றும் 4680 பாரத் செல்களுக்கான பயன்பாட்டை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, 4680 செல்களை அடிப்படையாக கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) தீர்வாக நிறுவனம் விரிவடைந்தது.
சக்தி என பெயரிடபட்ட BESS தீர்வுகள் டெலிவரி விரைவில் துவங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. 6kW/9.1kWh டெலிவரி ஜனவரி இறுதியிலும், 3kW/5.2kWh பிப்ரவரி மத்தியிலும் துவங்க உள்ளது.
மேலும், 4680 பாரத் செல் கொண்டு இயங்கும் அதன் ரோட்ஸ்டர் X+ 9.1kWh டெலிவரியையும் துவக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக நிறுவனம் குறைவான சந்தை பங்கை எதிர்கொண்டு வருகிறது. மின் இருசக்கர வாகன பிரிவில் போட்டி அதிகரிக்கும் நிலையில் சந்தை பங்கு இழப்பை சமாளித்துள்ளது.
தமிழில்: சைபர் சிம்மன்
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மா, ஓலா எலெக்ட்ரிக் சுயேட்சை நிறுவனராக உள்ளார்.)
Edited by Induja Raghunathan