
பேடிஎம் பிராண்டை கொண்ட ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 2026 மார்ச் காலாண்டு அளவில் உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்கள் பங்கை உயர்த்தியதை அடுத்து, இந்தியர்களால் பெரும்பாலும் உரிமை மற்றும் கட்டுப்பாடு கொண்ட நிறுவனமாக உருவாகியுள்ளது.
அண்மை காலாண்டுகளில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, இந்நிறுவனத்தின் அமைப்பில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகரிக்கும் முதலீட்டாளர் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு நிதி முதலீட்டாளர்கள் தங்கள் பங்கை மார்ச் காலாண்டில் 23.1 சதவீதமாக உயர்த்தினர். இது 2.1 சதவீதம் அதிகம். ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட 9.1 சதவீதம் அதிகம் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இதில் முன்னிலை வகித்தன. முந்தைய காலாண்டில் 14.3 சதவீதம் எனும் நிலையில் இருந்து பங்கை 16.6 சதவீதமாக உயர்த்தின. முதலீடு செய்த மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எண்ணிக்கையும் 36இல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளன. மோதிலால் ஆஸ்வல் மியூச்சுவல் பண்ட், மிரே அசட், பந்தன் மீயூச்சுவல் பண்ட் உள்ளிட்டவை தங்கள் பங்கை அதிகரித்துள்ளன.
காப்பீடு நிறுவனங்களும் தங்கள் பங்கை 4.8இல் இருந்து 5.1 சதவீதமாக உயர்த்தியுள்ளன. டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ பைல் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உள்நாட்டு உரிமை பங்கு அதிகரித்திருப்பதோடு நிறுவன செயல்பாடும் மேம்பட்டிருக்கிறது. டிசம்பர் காலாண்டில் தொடர்ந்து மூன்றாவது லாப காலாண்டாக அமைந்துள்ளது. நிகர லாபம் ரூ.225 கோடியாக அமைந்துள்ளது. ஆண்டு அடிப்படையில் வருவாய் ரூ.2,194 கோடியாக உள்ளது.
EBITDA ரூ.156 கோடியாக உள்ளது, லாப விகிதம் 7 சதவீதமாக உள்ளது. நிறுவனத்தின் வணிகர் பரப்பும் அதிகரித்துள்ளது. உறுப்பினர் வணிகர்கள் 1.44 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டைவிட 24 சதவீதம் அதிகம்.
பங்கு நிறுவனங்களும் இந்த மேம்பாட்டை கவனித்துள்ளன. பாங்க் ஆப் அமெரிக்கா நிறுவன பங்கு தொடர்பான ரேட்டிங்கை உயர்த்தியுள்ளது. பணமாக்கல், லாப விகிதம் உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளது. பெர்ன்ஸ்டெய்ன் நிறுவனமும், இதன் வணிகர்கள் வர்த்தகத்தின் சாதக அம்சத்தை சுட்டிக்காட்டி, வருவாய் தொடர்பான நேர்நிறை கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பாங்க் ஆப் அமெரிக்கா, பேடிஎம் பங்கு ரேட்டிங்கை மேம்படுத்தி, அதிக பணம்மாக்கல் பிரிவில் அதன் முன்னிலையை குறிப்பிட்டுள்ளதோடு, லாப விகிதமும் மேம்படுவதாக தெரிவித்துள்ளது.
பி2பி பிரிவில் நிறுவனம் வலுவாக இருப்பதாகவும், அதன் பணமாக்கல் பயணம் விரிவடைந்த வர்த்தகம், மற்றும் லாப விகிதம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரூ.1380 எனும் இலக்கு விலையில், இதன் பங்குகளுக்கு வாங்கலாம் எனும் பரிந்துரை வழங்கியுள்ளது.
பெர்ன்ஸ்டெய்ன் நிறுவனமும் பேடிஎம்-இன் பணமாக்கல் சாதகத்தை குறிப்பிட்டுள்ளது. அதன் வணிகர் வருவாய் போட்டி நிறுவனங்களை விட இரு மடங்காக இருப்பதாக தெரிவித்துள்ளது. லாபவிகிதம் மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பங்கிற்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளது.
உள்நாட்டு முதலீடு அதிகரித்திருப்பது, நிறுவனம் கட்டுப்பாடு நோக்கில் எதிர்கொண்டு வந்த அழுத்தங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய நிதி நுட்ப துறையில் அந்நிய முதலீடுகள் அதிக கண்காணிப்புக்கு உள்ளாகும் சூழலில் இந்த நிகழ்வு அமைகிறது. உள்நாடு சார்ந்த முதலீட்டாளர்கள் அதிகரிப்பது, விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவதில் சாதகமாக அமையும்.
மேலும், முதலீட்டாளர்கள் அமைப்பிலான மாற்றம் நிறுவன பங்கிற்கு சந்தையில் நிலைத்தன்மை அளிக்கும். குறிப்பாக மியூச்சுவல் பண்ட் மற்றும் காப்பீடு நிறுவன முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடு நோக்கம் கொண்டவர்களாக அமைகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சர்வதேச பணமாக்கல் சுழற்சி தாக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
வணிகர்கள் கட்டணம், சாதனங்கள் கட்டணம், நிதிச்சேவைகள் உள்ளிட்ட அதிக லாபம் கொண்ட பிரிவில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. முன்னதாக வளர்ச்சிக்காக ரொக்கத்தை அதிகம் பயன்படுத்திய அணுகுமுறையில் இருந்து மாறியுள்ளது. இந்த மாற்றம் இந்திய நிதி நுட்ப த்துறை முதிர்ச்சி அடைவதை உணர்த்துவதாக அமைகிறது.
பிடிஐ தகவல்கள் உதவியுடன் யுவர்ஸ்டோரி குழு, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan