
இந்தியா முழுவதும் குவிக் காமர்ஸ் அலை வீசி வரும் நிலையில், குவிக் காமர்ஸ் பயனாளிகள் பால், ஸ்மார்ட்போன்கள், தங்கம், ஐபோன் உள்ளிட்டவற்றை வாங்கி குவித்திருப்பதை இன்ஸ்டாமார்ட் ஆண்டு அறிக்கை உணர்த்துகிறது.
இந்தியா முழுவதும் குவிக்காமர்ஸ் சேவை பெரிய அளவில் தழுவிக்கொள்ளப்பட்ட ஆண்டாகவும் 2025 அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பொருட்கள் தவிர பண்டிகை காலங்களில் ரோஜா மலர்கள், பரிசுப்பொருட்கள், என பயனாளிகள் கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் இந்த சேவை வேகமாக பிரபலமாகி வருகிறது.
ஸ்விக்கியின் குவிக் காமர்ஸ் சேவை நிறுவனம் இன்ஸ்டாமார்ட், ஆண்டுதோறும் விற்பனை அலசல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பல்வேறு சுவாரஸ்யமான போக்குகளை சுட்டிக்காட்டுகிறது.
பத்து ரூபாய்க்கு வாங்கப்பட்ட பிரிண்ட் அவுட் முதல் ரூ.4.3 லட்சத்திற்கு வாங்கப்பட்ட புதிய ஐபோன் வரை பயனாளிகள் தேர்வு அமைகிறது. தொடர்ந்து வாங்கும் பயனாளிகளில் ஒருவர் ரூ.22 லட்சத்திற்கு பொருட்களை வாங்கியுள்ளார். தங்க நாணயம், ஐபோன், பால், ஐஸ் கீரிம், பழங்கள் என பலவித பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாமார்ட் ஆண்டு விற்பனை அறிக்கை மேலும் பல சுவாரஸ்யமான போக்குகளை வெளிப்படுத்துகிறது:
பால், தயிர், வெண்ணை
தினசரி வாங்கப்பட்ட பொருட்களில் பாலும், பால் பொருட்களும் முன்னிலை பெற்றன. இந்த ஆண்டு இந்தியா நொடிக்கு 4 பால் பாக்கெட்கள் வாங்கியது. பால் மட்டும் அல்ல, பன்னீரும் அதிகம் வாங்கப்பட்டன. சீசை விட அதிக அளவு பன்னீர் விற்பனை ஆனது. ஸ்மார்ட் போனை விட மசாலா சிப்ஸ்களுக்கு அதிக ஆதரவு இருந்தது. பத்து முன்னணி நகரங்களில் 9 நகரங்களில் சிப்ஸ்கள் முதலிடம் பெற்றன.
பெரிய அளவிலான பொருட்களும் அதிகம் வாங்கப்பட்டன.
- ஐதராபாத் நகரில் ஒரு பயனாளி ₹4.3 லட்சம் செலவு செய்து ஐபோன் 17 வாங்கினார்.
- நொய்டாவில் ஒருவர் ₹2.69 லட்சத்திற்கு புளுடூத் ஸ்பீக்கர், எஸ்.எஸ்.டி, ரோபோ வாக்குவம் கிளினரை ஒரே முறையில் வாங்கினார்.
- பெங்களூரு தீபாவளி அன்று ₹1,97,000 மதிப்பிலான ஒரு கிலே வெள்ளி வாங்கியது.
- தசரா காலத்தில் தங்கம் வாங்கும் ஆர்டர்கள் 400 சதவீதம் அதிகரித்தது.
சமையலறை பொருட்கள் அதிகம் வாங்கப்பட்டன. கறிவேப்பிலை, முட்டை, வாழைப்பழம், ஆகியவை தொடர்ந்து வாங்கப்பட்டன. கொச்சியில் ஒருவர் தினமும் கறிவேப்பிலை வாங்கினார்.
அதிக ஆர்டர்கள் வந்த நகரங்கள் பட்டியல்: கொல்கத்தா (1,197 ஆர்டர்), மும்பை (1,142),கொச்சி (1,089) குர்காவ்ன் (1,033)
காலை 7 மணி முதல் 11 மணி வரை மற்றும் 4 மணி முதல் 7 மணி வரை பொருட்கள் வாங்கும் உச்ச நேரமாக அமைந்தது.
எல்லாம் வேகம்
அதிவேகம்: 2 மினிட் நூடுல்ஸ் இரண்டு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா? லக்னோ நகரில் பசியோடு இருந்த பயனாளியை மேகி நூடுல்ஸ் இரண்டு நிமிடங்களுக்குள் சென்றடைந்தது. ஆனால், ஐபோன் 17 பரபரப்புக்கு மத்தியில் புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் இருவர் புதிய ஐபோனை மூன்று நிமிடங்களுக்குள் வாங்கினர்.

2025ல் இந்தியா எப்படி வாங்கியது என்பதை பார்க்கலாம்.
நுகர்வோர் வசதிக்கு முன்னுரிமை அளித்து வேகமான சேவையை விரும்பும் நிலையில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களும் தெரிய வந்துள்ளன.
- ஒவ்வொரு 127 ஆர்டருக்கு ஒரு ஆணுறை வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கணக்கில் இருந்து மட்டும் 228 முறை தனித்தனியே ₹1,06,398 க்கு ஆணுறை வாங்கப்பட்டது.
- இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் பயனாளிகள் தாராள மனதையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு உள்ளூர் பயனாளி டிப் அளித்தலில் மட்டும் ₹68,600 வழங்கினார். சென்னை அடுத்த இடம்: ₹59,505
- பெங்களூரு பயனாளிகள் ₹1.7 லட்சம் மதிப்புள்ள ஐபோனுடன் ₹178 மதிப்புள்ள லைம்சோடா வாங்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் குவிக் காமர்ஸ் வேகமாக அதிகரித்து வருகிறது.
ராஜ்கோட் நகரில் 10 மடங்கு வளர்ச்சி உண்டானது, லூதியானாவில் 7 மடங்கு மற்றும் புவனேஸ்வரம் நகரில் 4 மடங்கு வளர்ச்சி உண்டானது.
கொண்டாடும் இந்தியா
பண்டிகை, திருவிழா போன்ற காலங்களில் ரோஜா மலர்கள் விற்பனை அதிகரித்தது உள்ளிட்ட கொண்ட்டாட்ட மனநிலையை காண முடிந்தது.
சாக்லெட் காதல் : காதலர் தினத்தில் நிமிடத்திற்கு 666 ரோஜாக்கள் ஆர்டர் செய்யப்பட்டன. பெங்களூரு நகரில் நிமிடத்திற்கு 1,780 ரோஜா மற்றும் சாக்லெட்கள் ஆர்டர் செய்யப்பட்டன.
திங்கள் பரிசு: இந்தியா முழுவதும் திங்கள் கிழமைகளில் அதிகம் பரிசுகள் வாங்கப்பட்டன.
நண்பர்கள் தினம்: ரக்ஷா பந்தன், நண்பர்கள் தினம் மற்றும் காதலர் தினம் அதிகம் பரிசிகள்க்கப்பட்ட தினங்களாக அமைந்தன.
செலவாளிகள்
இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் செலவு செய்தவர்களையும், ஸ்மார்ட்டாக செலவு செய்தவர்களையும் பார்க்கலாம்.
- 4 லட்சம் நூடுல்ஸ்: பெங்களூரு கணக்கு ஒன்றில் இருந்து ₹4,36,153 க்கு நூடுல்ஸ் வாங்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
- சுகர் ஃபிரி: மும்பை கணக்கு ஒன்று ரெட் புல் சுகர் பிரியில் ₹16.3 லட்சம் செலவிட்டது.
- ரோஜா, ரோஜா: ஐதராபாத் பயனாளி ஒருவர் ரோஜாக்களில் ₹31,240 செலவிட்டார்.
- செலப்பிராணி: சென்னை பயனாளி ஒருவர் ₹2.41 லட்சத்தை செல்லப்பிராணிகளுக்கான பொருட்களில் செலவிட்டார்.
- புரதம்: நொய்டா உடற்பயிற்சி ஆர்வலர் புரதப்பொருட்கள் வாங்க ₹2.8 லட்சம் செலவிட்டார்.
- தங்கம்: மும்பை பயனாளி ஒருவர் ₹15.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் வாங்கினார்.
- 10ரூபாய் ஆர்டர் : பெங்களூரு பயனாளி ஒருவர் பத்து ரூபாய்க்கு பிரிண்ட் அவுட் வாங்கியது தான் மிகவும் குறைந்த விலை சேவையாக அமைந்தது.
- புரதம் சார்ந்த பொருட்கள், கொரிய நூடுல்ஸ் , தேநீர் உள்ளிட்டவை உணவு பிரிவில் முன்னிலை வகித்தன.
- புரதம் ஆதிக்கம்: முன்னணி பத்து புரதம் சார்ந்த பொருட்களில் பார்கள், உடனடி பாணங்கள் (ஷேக்) மற்றும் யோகர்ட் அமைந்திருந்தன. இந்தியாவின் உணவு வழக்கறிஞராக அறியப்படும் புட்பார்மர் (FoodPharmer) புரத பிராண்டும் இன்ஸ்டாமார்ட்டில் அறிமுகமானது.
- கொரிய சுவை: பெங்களூருவில் Gochujang சாஸ் ஆர்டர்கள் +491%, அதிகரித்தன. விற்பனையான பத்து முன்னணி கொரிய பொருட்களில் 9 நூடுல்ஸாக அமைந்தது.
- தேநீர் முன்னிலை: ஒவ்வொரு கோப்பை காபிக்கும், 1.3 கோப்பை தேநீரை இந்தியா பருகிறது. (முன்னணி பத்து நகரங்கள்)
- தேடல்: இன்ஸ்டாமார்ட் பயனாளிகள் எல்லாவற்றையும் தேடினர்- ஸ்விக்கி (7,000), டிரோன்கள் (1,453), பெட்ரோல் (1,069), ஏர்பஸ் (938).

Newly launched Instamart logo
இந்தியாவின் அதிவேக டெலிவரி
இன்ஸ்டாமார்ட்டின் குவிக் இந்தியா மூவ்மெண்ட் விற்பனை திட்டம், பயனாளிகளுக்கு ரூ.500 கோடி சேமிப்பை வழங்கியது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் முதல் முறை பயனாளிகள் இரண்டு மடங்கு அதிகரித்தனர்.
மற்ற முக்கிய அம்சங்கள்:
- சென்னையில் தொழில்நுட்பத் திறன் கொண்ட பயனாளி ஒருவர் ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ரூ.7,000 விலையில் வாங்கினார்.
- பூனேவில் 3 நிமிடத்தில் வேகமான டெலிவரி நிகழ்ந்தது. அகமதாபாத்தில் 3.5 நிமிடத்தில் நிகழ்ந்தது.
Edited by Induja Raghunathan