+

தமிழ்நாட்டில் 6,000 பெண்களுக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கும் EmpowHer திட்டம் துவக்கம்!

தமிழ்நாட்டில் பெண்கள் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் ஓராண்டில் 6,000 பெண்களுக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கும் நோக்கம் கொண்ட எம்பவர் 1.0 (EmpowHer 1.0) நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் துவங்கியது.

தமிழ்நாட்டில் பெண்கள் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் ஓராண்டில் 6,000 பெண்களுக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கும் நோக்கம் கொண்ட 'எம்பவ்ஹர் 1.0' (EmpowHer 1.0) நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் துவங்கியது.

ஸ்டார்ட் அப் டிஎன் மற்றும் டிஎன்விசேப் திட்டம் (TNWeSafe) ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. ஸ்டார்ட் அப் டிஎன் திட்ட சி.இ.ஓ. சிவராஜா ராமநாதன் முன்னிலையில் டிஎன்விசேப் திட்ட இயக்குனர் ஆஷா அஜித் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஸ்டார்ட்அப் டிஎன் அதிகாரிகள், தொழில்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

 EmpowHer

துவக்க நிகழ்ச்சியில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 160 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இரண்டு நாள் பயிற்சி, தொழில்முனைவு ஆர்வத்தை வர்த்தமாக மாற்றக்கூடிய வகையில் தீவிரமான பயிற்சி, வழிகாட்டுதல் கொண்டதாக அமைந்துள்ளது.

நிறுவனர் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மனநிலை மாற்றம், ஐடியாக்களை வர்த்தகமாக மாற்றுவதற்கான களம் சார்ந்த பயிற்சி, முதலீட்டாளர்களிடம் சிறந்த முறையில் தகவல் தொடர்பு கொள்வது உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிக்கு பிந்தைய வரைவு திட்ட ஆதரவு அளிக்கப்படும்.

மாநிலத்தில் பெண்கள் வழிநடத்தும் தொழில்முனைவை ஊக்குவிக்க ஓராண்டில் 6,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டிஎன்

இந்த நிகழ்ச்சியின் போது, தொழில்துறை, தொழில்முனைவு ஊக்கத்திற்காக எத்திராஜ் கல்லூரியில் கேம்பஸ் சர்கிள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்லூரி வளாகத்தில் இன்குபேஷனுக்கு முந்தைய மையத்தை திட்ட இயக்குனர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். மாணவர்கள், பெண் தொழில்முனைவோருக்கு இந்த மையம் ஆரம்ப நிலை ஆதரவை வழங்கி வழிகாட்டும்.

மேலும், நேச்சுரல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ’நேச்சுரல்ஸ் பியூட்டிடெக் ஹேக்கத்தான் 2026’ நிகழ்ச்சியும் துவக்கி வைக்கப்பட்டது. இணை நிறுவனர்கள் சி.கே.குமரவேல் மற்றும் வீணா குமரவேல் முன்னிலை வகித்தனர். அழகுகலை துறையில் தரவுகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதுமையாக்கத்திற்கு வழிகாட்டும் வகையில் இது அமைகிறது.


Edited by Induja Raghunathan

facebook twitter