மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் நிலவுவது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 264.82 புள்ளிகள் சரிந்து 76,224.14 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 27.6 புள்ளிகள் சரிந்து 23,977.70 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர்ச் சூழல் நிலவுவது, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பது, சர்வதேச சந்தைகளின் சாதகப் போக்கு உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், எடர்னல், மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. சன் பார்மா, டிசிஎஸ், டைடன் கம்பெனி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 124.94 புள்ளிகள் சரிந்து 76,364.02 ஆகவும், நிஃப்டி 7.15 புள்ளிகள் சரிந்து 24,024.55 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் சரிவே நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர்ச் சூழல் நிலவுவது, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பது, சர்வதேச சந்தைகளின் சாதகப் போக்கு உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
எடர்னல்
மாருதி சுசுகி
டெக் மஹிந்திரா
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இன்போசிஸ்
அதானி போர்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
எல் அண்ட் டி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
எஸ்பிஐ
என்டிபிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
சன் பார்மா
டிசிஎஸ்
டைடன் கம்பெனி
பாரதி ஏர்டெல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஆக்சிஸ் பேங்க்
எம் அண்ட் எம்
டாடா மோட்டார்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.39 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan