+

Stock News: இந்திய பங்குச் சந்தையில் கலவையான போக்கு நீடிப்பு!

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி உடன்பாடு எட்டாத நிலையில், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. மேலும், சர்வதேச சந்தைகளில் நிலவும் பாதகப் போக்கு என்பது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

ஈரான் விவகாரம், சர்வதேச சந்தைகளின் சாதகப் போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றமும் இறக்கமுமாக கலவையான போக்கு நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 223.55 புள்ளிகள் சரிந்து 77,080.08 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 48.20 புள்ளிகள் சரிந்து 24,044.50 ஆக இருந்தது.

“ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி உடன்பாடு எட்டாத நிலையில், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. மேலும், சர்வதேச சந்தைகளில் நிலவும் பாதகப் போக்கு என்பது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது” வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எம் அண்ட் எம், நெஸ்லே இந்தியா, கோடக் மஹிந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றமும், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவும் கண்டிருந்தன.

இன்று காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 99.00 புள்ளிகள் உயர்ந்து 77,402.63 ஆகவும், நிஃப்டி 60.75 புள்ளிகள் உயர்ந்து 24,153.45 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஜப்பான், ஷாங்காய், தென் கொரியா, ஹாங்காங் என அனைத்திலுமே தடுமாற்றம் நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி உடன்பாடு எட்டாத நிலையில், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. மேலும், சர்வதேச சந்தைகளில் நிலவும் பாதகப் போக்கு என்பது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

எம் அண்ட் எம்

நெஸ்லே இந்தியா

கோடக் மஹிந்திரா பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

என்டிபிசி

டாடா மோட்டார்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாடா ஸ்டீல்

ஏசியன் பெயின்ட்ஸ்

மாருதி சுசுகி

அதானி போர்ட்ஸ்

ஐடிசி

சன் பார்மா

டைடன் கம்பெனி

பஜாஜ் ஃபைனான்ஸ்

எல் அண்ட் டி

பாரதி ஏர்டெல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

டெக் மஹிந்திரா

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ஐசிஐசிஐ பேங்க்

இந்துஸ்தான் யூனிலீவர்

எஸ்பிஐ

ஆக்சிஸ் பேங்க்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

இன்போசிஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.40 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter