Stock News: சிவப்பும் பச்சையுமாக இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிப்பு

12:44 PM May 27, 2026 | Jai s

மேற்கு ஆசியாவில் தொடரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்கமுமாக தடுமாற்றம் நீடிக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 127.83 புள்ளிகள் உயர்ந்து 76,137.53 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 36.45 புள்ளிகள் உயர்ந்து 23,950.15 ஆக இருந்தது. பின்னர், மீண்டும் சரிவுப் போக்கு தொற்றியது.

“மேற்கு ஆசியாவில் தொடரும் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணங்களால் பின்னடைவு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, எல் அண்ட் டி

உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. டிசிஎஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசுகி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 37.76 புள்ளிகள் உயர்ந்து 76,047.46 ஆகவும், நிஃப்டி 21.30 புள்ளிகள் உயர்ந்து 23,935.00 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையிலும், ஆசிய பங்குச் சந்தைகளிலும் தடுமாற்றமே நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் தொடரும் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணங்களால் பின்னடைவு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச் சந்தையிலும் தடுமாற்றம் நிலவுகிறது

ஏறுமுகம் காணும் பங்குகள்:

டெக் மஹிந்திரா

அதானி போர்ட்ஸ்

நெஸ்லே இந்தியா

எல் அண்ட் டி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

எஸ்பிஐ

என்டிபிசி

ஏசியன் பெயின்ட்ஸ்

எடர்னல்

டைடன் கம்பெனி

பாரதி ஏர்டெல்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ஐசிஐசிஐ பேங்க்

டாடா ஸ்டீல்

பஜாஜ் ஃபைனான்ஸ்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆக்சிஸ் பேங்க்

எம் அண்ட் எம்

டாடா மோட்டார்ஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

இண்டஸ்இண்ட் பேங்க்

டிசிஎஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

மாருதி சுசுகி

சன் பார்மா

இன்போசிஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

இந்துஸ்தான் யூனிலீவர்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐடிசி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.79 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan