கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து எழுச்சிப் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 303.73 புள்ளிகள் உயர்ந்து 303.73 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 85.40 புள்ளிகள் உயர்ந்து 23,327.50 ஆக இருந்தது.
“மேற்கு ஆசிய மோதல் போக்கு தணிந்துள்ளது, கச்சா எண்ணெய் விலை சரிவு, சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதக போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் எழுச்சி ஏற்பட்டுள்ளது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. பாரதி ஏர்டெல், எடர்னல், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.10 மணியளவில் சென்செக்ஸ் 532.95 புள்ளிகள் உயர்ந்து 74,451.70 ஆகவும், நிஃப்டி 145.05 புள்ளிகள் உயர்ந்து 23,387.15 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் நிலவுகிறது. மேற்கு ஆசிய மோதல் போக்கு தணிந்துள்ளது, கச்சா எண்ணெய் விலை சரிவு, சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதக போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
என்டிபிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
எல் அண்ட் டி
நெஸ்லே இந்தியா
கோடக் மஹிந்திரா பேங்க்
சன் பார்மா
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டைடன் கம்பெனி
பாரதி ஏர்டெல்
எடர்னல்
டாடா ஸ்டீல்
டெக் மஹிந்திரா
டாடா மோட்டார்ஸ்
எம் அண்ட் எம்
இண்டஸ்ட்இண்ட் பேங்க்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.12 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan