
சர்வதேச போக்குகளின் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுகிறது. சென்செக்ஸ் 600+ புள்ளிகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 518.84 புள்ளிகள் உயர்ந்து 76,589.68 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 157.75 புள்ளிகள் உயர்ந்து 23,738.90 ஆக இருந்தது.
“ஈரானில் போர்ச் சூழல் நீடித்தபோதும் கூட கச்சா எண்ணெய் விலை சற்றே சரிந்துள்ளது. அத்துடன், சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. அதுவே, இப்போது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா, என்டிபிசி, ஐடிசி, டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன. ஏனைய பல்வேறு நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டன.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 607.20 புள்ளிகள் உயர்ந்து 76,678.04 ஆகவும், நிஃப்டி 188.05 புள்ளிகள் உயர்ந்து 23,769.20 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமே நிலவுகிறது. ஈரானில் போர்ச் சூழல் நீடித்தபோதும் கூட கச்சா எண்ணெய் விலை சற்றே சரிந்துள்ளது. அத்துடன், சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. அதுவே, இப்போது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டைடன் கம்பெனி
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
டிசிஎஸ்
இன்போசிஸ்
பாரதி ஏர்டெல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
சன் பார்மா
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
என்டிபிசி
ஐடிசி
டாடா ஸ்டீல்
கோடக் மஹிந்திரா பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.43 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan